யாரெல்லாம் கத்தரிக்காய் உண்பதை தவிரக்க வேண்டும்?
23 Apr,2025
காய்கறிகளிலேயே கத்தரிக்காய் அற்புதமான ஒரு சுவையைக் கொண்டது. கத்தரிக்காயை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், ஒரு சிலர் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிகள் - கத்தரிக்காயில் காணப்படும் பைட்டோஹோர்மோன்கள் கர்ப்ப காலத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.
சிறுநீரக கற்கள் - கத்தரிக்காயில் அக்சலேட் காணப்படுவதால் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மூல நோய் - மூல நோயை தீவிரமாக்கும் உட்கூறுகள் கத்தரிக்காயில் அதிகம் இருப்பதால் மூல நோய் உள்ளவர்கள் அதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
செரிமானம் - சோலனைன் என்ற ஆல்கலாய்டு கத்தரிக்காயில் அதிகம் காணப்படுகிறது. இதனால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி பிரச்சினைகள் இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
ஒவ்வாமை - கத்தரிக்காயில் காணப்படும் ஹிஸ்டைமன் எனப்படும் சேர்மஙகள் தோல் அரிப்பு, தோல் சிவத்தல், படை நோய், உதடுகள் வீங்குதல், நாக்கு வீங்குதல், தொண்டை இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதால் ஒவ்வாமை இருப்பவர்கள் இதனை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.