பிரமிடுகள் இயற்னையாவே உருவானவை – மனிதர்களால் கட்டப்படவில்லை.
பிரமிடுகள் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எகிப்துதான். இங்குள்ள பழமையான பிரமிடுகள் கி.மு 2,630ல் மன்னர் ஜோசர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது.
இதனிடையே இந்தோனேசிய அறிவியல் கழகத்தை சேர்ந்த டேனி ஹில்மன் நடவிட்ஜாஜா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அண்மையில் தொல்பொருள் ஆய்வு குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது, இந்தேனேசியாவின் குனாங்க் படாங் பகுதியில் இருக்கும் பிரமிடின் மையப்பகுதி சிக்கலான் மிகப்பெரிய எரிமலையால் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இயற்கையான எரிமலை குன்றாக இருந்த பகுதியை பிரமிடின் மையப் பகுதியாக வைத்து, சிற்பம் மற்றும் கட்டிடக் கலையின் மூலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம் முந்தைய காலகட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களை விளக்குவதாக கூறியுள்ள ஆராய்ச்சிக் குழு, சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தின் தொடக்கத்தில்தான் மனித நாகரிகம் வளரத் தொடங்கியதாகவும், கட்டுமானத் திறன்களை மனித இனம் பெற்றது என்ற கருத்துகளையும் கேள்விக்குறியாக்கிள்ளது.
எனவே, துருக்கியில் இருக்கும் சான்றுகளை விட, விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே மேம்பட்ட கட்டுமான நடைமுறைகள் இருந்ததாக கூறுவது ஆராய்ச்சியாளர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதனிடையே, பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபிளிண்ட் டிபிள் அளித்துள்ள பேட்டியில், புதைக்கப்பட்ட அடுக்குகளில் மனித கட்டுமானத்தை குறிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மனித தலையீடு இல்லாம மலையில் இருந்து உருளும் பொருட்கள் இயற்கையாகவே தங்களை திசை திருப்பி முனைந்திருக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சதர்ன் கனெக்டிகட் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பில் பார்லி, குனாங்க் படாங்கில் இருந்து 27,000 ஆண்டுகள் பழமையான மண் மாதிரிகள், எலும்பு துண்டுகள் எடுக்கப்படவில்லை என்றும், இது வழக்கமான மனித செயல்பாடு குறியீடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.