பெண் மதுபோதையில் தூங்கியபோது கால்களை கடித்து தின்ற எலிகள்...
23 Jun,2024
ஆட்டுக்கொட்டகையில் படுத்து உறங்கிய பெண்மணி ஒருவர், மீண்டும் எழுந்து பார்த்தபோது தனது இரண்டு கால்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் ஆட்டுக்கொட்டகையில் படுத்து உறங்கிய 60 வயதான ரஷ்ய பெண் ஒருவர், மீண்டும் எழுந்து பார்த்தபோது தனது இரண்டு கால்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரினா என்ற பெயருடைய இந்தப் பெண்மணி மிகவும் மோசமான நிலையில் படுத்திருப்பதை கண்ட அந்த வழியாக வந்த ஒருவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி என்னதான் இந்தப் பெண்மணிக்கு நடந்தது? குடிபோதையில் அசந்து தூங்கியபோது இவருடைய இரண்டு கால்களையும் ஆட்டுக் கொட்டகையில் இருந்த எலிகள் தின்றுள்ளன. இவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்பே கால் தசைகள் அனைத்தும் அழுகிப் போயிருந்ததால், வேறு வழியின்றி இரண்டு கால்களையுமே மருத்துவர்கள் வெட்டி எடுத்துவிட்டனர்.
நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது, என் கால்களை எலி தின்றுவிட்டது என அப்பாவியாக கூறுகிறார் மரினா. சொந்தமாக வீடு இல்லாத காரணத்தினால் தற்போது வீடில்லாதவர்களுக்கான தங்குமிடத்தில் ஓய்வெடுத்து வருகிறார் மரினா. ஆனால் தீ விபத்து ஏற்படக்கூடும் ஆபத்து இருப்பதால் இந்த தங்குமிடத்தை கூடிய விரைவில் மூடுவதற்கான அனைத்து வேலைகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இந்தப் பெண்மணியிடம் எந்த ஆவணங்களுமே கிடையாது. இவரை கவனித்துக் கொள்வதற்கும் உறவினர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த தங்குமிடத்தில் அவர் சில நண்பர்களைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இப்போதுதான் ஓரளவிற்கு காயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். என்ன காரணமோ தெரியவில்லை, இவருடைய குடும்பத்தினர் இவர் பற்றிய எந்த தகவல்களையும் கேட்பதுமில்லை. அவரோடு பேசுவதுமில்லை. இவருக்கென்று போக்கிடம் ஏதும் கிடையாது. சொந்தமாக ஒரு பொருள் கூட கிடையாது. ஆனாலும் வீதி வீதியாக சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார் என தங்குமிடத்தின் இயக்குனர் கூறுகிறார்.
இந்தப் பெண்மணியின் சகோதரரை தொடர்புகொண்டு பேசியபோது, தனது சகோதரியோடு பேசி பல வருடங்கள் கடந்துவிட்டதாகவும், இந்த விஷயத்திற்காக இனி என்னை அழைக்காதீர்கள் எனவும் கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் இஷ்டம் போல் எதையாவது செய்து கொண்டிருக்கிறார். மரினா, இப்போது குடிக்கிறாயா? என நான் அவரிடன் கேட்டால், தாராளமாக குடிக்கிறேன். உடனே கொண்டு வாருங்கள் என்றுதான் கூறுவார். சிகரெட் பழக்கம் வேறு இருக்கிறது என கவலையோடு கூறுகிறார் தங்குமிடத்தின் இயக்குனர்.