கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்... .
22 Jun,2024
பிச்சைக்கார்ர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். யார் அந்த பணக்கார பிச்சைக்காரர்? அவர் மட்டும் இவ்வுளவு பணம் சம்பாதிக்க என்ன காரணம்? இதன் பின்னால் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாளுக்கு நாள் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருவதாக பல்வேறு செய்திகள் கூறுகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பணவீக்கமும் உச்சத்தில் இருப்பதால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நசிந்து போகும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் கடன்களை அடைக்கவும் வெளிநாடுகளிடமிருந்து நிதி உதவியை கோர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசாங்கம். எனினும் இவ்வுளவு பனவீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். யார் அந்த பணக்கார பிச்சைக்காரர்? அவர் மட்டும் இவ்வுளவு பணம் சம்பாதிக்க என்ன காரணம்? இதன் பின்னால் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சில நபர்கள் வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது இவர்கள் பணக்காரர்களா இல்லை ஏழையா என்று நம்மால் உறுதியாக கூறவே முடியாது. சிலர் எவ்வுளவு கோடீஸ்வரராக இருந்தாலும் பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பார்கள். இவரிடமா இவ்வுளவு சொத்துகள் இருக்கிறது என நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். இன்னும் சிலரோ பார்ப்பதற்கு பிச்சைக்காரர் போல் இருப்பார்கள். ஆனால் அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும். அப்படியொரு நபரைப் பற்றியே இப்போது பார்க்கப் போகிறோம்.
நிச்சியம் பலருக்கும் இந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரரைப் பற்றி தெரிந்திருக்காது. . இவரது சொத்து மதிப்பை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்தே போவீர்கள். நாம் நினைப்பது போல் ஆயிரமோ, லட்சமோ இல்லை. எல்லாமே கோடிக்கணக்கில் தான் இவருடைய சொத்து உள்ளது. தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்திருப்பதோடு அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார்.
இவருடைய பெயர் ஷவுகத். பாகிஸ்தானின் பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் இவர் வசித்து வருகிறார். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஷவுகத்தின் வங்கி கணக்கில் மட்டும் 1.7 மில்லியன் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான ஃபெடரல் போர்டு ஆஃப் ரிவென்யூ (FBR) கூறியுள்ளது. பிச்சையெடுப்பதின் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 வரையாவது இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது.
ஷவுகத்தின் குழந்தைகள் முல்தான் நகரிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பிரபலமான பள்ளியில் படித்து வருகிறார்கள். இதற்கிடையில் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் ஆர்வமாக பகிர்ந்து வருகிறர் ஷவுகத்.