தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதி இருவருக்கும் ஒளிவு மறைவு கூடாது. பாலியல் குறித்த தயக்கங்கள், சந்தேகங்கள், விருப்பங்களை இருவருமே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை சிறக்கவே செய்யும். ஆனால் பல நேரங்களில் பெண்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை வெறுப்பையே உண்டு செய்துவிடுகிறது என்கிறார் டாக்டர்
உண்மையில் பல ஆண்களுக்கு உடலுறவின் மீது இருக்கும் ஆர்வம் பெண்களின் உடல் பற்றிய புரிதலில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் உறவில் விந்து வெளியேற்றுதலிலேயே இருக்கும். அதிலும் வேகமாக விந்துவை வெளியேற்றிய பிறகு திருப்தியாகிவிடுவார்கள். பெண்கள் உச்சகட்டம் அடைய வேண்டும் என்று தவறான இடங்களில் தூண்ட செய்வார்கள். இது பெண்களுக்கு எரிச்சலையே உண்டு செய்யும். இதனால் பெண்கள் தாம்பத்தியத்தையே வெறுக்கலாம்.
ஆண் மலட்டுத்தன்மைக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?
பெண்கள் எப்போதும் மென்மையானவர்கள். அவர்கள் வேகத்தையோ, கடினமான அழுத்தத்தையோ விரும்புவதில்லை. உறவில் ஆர்வம் என்று ஆண்கள் பெண்களின் மார்பகங்களை அழுத்துவது அவர்களுக்கு உறவில் விருப்பம் என்பதை தாண்டி எரிச்சலையே உண்டு செய்யும்.
மகிழ்ச்சியே இல்லாமல் வேகவேகமாக உடலுறவு கொள்வது பெண்களை பாதிக்குமா?
மகிழ்ச்சியே இல்லாமல் வேகவேகமாக உடலுறவு கொள்வது பெண்களை பாதிக்குமா?
உடலுறவின் போது மனதளவிலும் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் வேக வேகமாக முன் விளையாட்டுகள் இல்லாமல் இறுதிகட்டத்தில் மட்டும் ஆண்கள் கவனம் செலுத்தும் போது பெண்கள் சலிப்பு கொள்ள வாய்ப்புண்டு. என்ஜாய் இல்லாமல் வேகவேகமாக செய்வது நாளடைவில் உடலுறவில் விருப்பத்தை குறைக்க செய்யும்.
உடலுறவின் போது முன் விளையாட்டுகளில் முத்தங்களுடன் தொடங்க வேண்டும். ஏன் எனில் மகிழ்ச்சியான தாம்பத்தியத்தில் உடல் தயாராவதை காட்டிலும் மனம் தயாராவது அவசியம். பெண்கள் உடலுறவு கொள்ள தயாராக இல்லை என்றாலும் கூட மகிழ்ச்சியான மனநிலைக்கு வர முத்தமிடுவது உதவும் இதன் மூலம் உடலளவிலும் உறவுக்கு தயாராவார்கள். ஆனால் இவை எதையும் செய்யாமல் உறவுக்கு வற்புறுத்துவது ஆணின் மீது மோசமான எண்ணத்தையே தூண்டும்.
அதனால் தான் முதலில் மனதளவில் அவர்களை மகிழ்ச்சி படுத்தி emotional stimulation பிறகு உடலளவில் physics simulation தயார் செய்ய வேண்டும். இந்த இரண்டும் நன்றாக இருந்தால் தான் மகிழ்ச்சியான தாம்பத்தியம் ஆகும்.
பெண்களின் விருப்பத்தை கவனிக்க தவறுவது தாம்பத்தியத்தை பாதிக்க செய்யும்
பெண்களின் விருப்பத்தை கவனிக்க தவறுவது தாம்பத்தியத்தை பாதிக்க செய்யும்
உறவின் போது முன் விளையாட்டுகள் தொடங்கி உறவின் இறுதி கட்டத்தில் பெண்களின் கிளைட்டோரியஸ் தூண்ட பெண்கள் விரும்பலாம். இதை ஆண்கள் சரியாக செய்தால் மகிழ்ச்சியான தாம்பத்தியம் இருவருக்குமே கிடைக்கும்.
உறவின் போது ஆண்கள் தங்கள் வாய் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பாக்கு போடுவது. இயல்பான துர்நாற்றம் போன்றவற்றுடன் பெண்ணை நெருங்கினால் பெண்களுக்கு விருப்பத்துக்கு மாறாக அருவெறுப்பு அதிகரிக்க செய்யும். உறவுக்கு முன்பு இருவரும் சுகாதாரம் பேணுவது உறவில் வெறுப்பை காட்டிலும் மகிழ்ச்சியை உண்டு செய்யும்.
உறவில் பெண்கள் தயங்கலாம். அப்போது நீ சரியாக இல்லை. உனக்கு எதுவுமே தெரியவில்லை. இதோடு அவர்கள் உடல் பாகங்கள் கமெண்ட் செய்வது. இவை எல்லாமே பெண்ணின் மனநிலையை கெடுத்துவிடும்.
பெண் சில பொசிஷன்களை விரும்ப மாட்டார்கள். உறவில் சில விஷயங்களில் விருப்பம் காட்டமாட்டார்கள். அப்போது அவர்களை வற்புறுத்தி ஆண் தன்னுடைய சந்தோஷத்தை பூர்த்தி செய்து கொள்ளும் போது இந்த பிரச்சனை வரலாம்.
ஆண்கள் மன அழுத்தம் இருந்தால் உடலுறவின் மூலம் அதை சரி செய்து கொள்வார்கள். பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் தான் உடலுறவில் ஈடுபடவே செய்வார்கள். ஆண்கள் பிரச்சனைகளிலிருந்து வெளிவர உடலுறவு உதவும். பெண்கள் ரிலாக்ஸ் ஆன பிறகு தான் உடலுறவு உள்ளேயே வருவார்கள். பெண்கள் தயாராக உள்ளார்களா இல்லையா என்பதை ஆண்கள் கவனிப்பதில்லை.
மகிழ்ச்சியான உறவுக்கு பிறகு அந்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ள உறவுக்கு பின் ஆண் பெண்ணிடம் மகிழ்ச்சியாக கட்டிப்பிடித்தபடி சில வார்த்தைகள் பேச வேண்டும் என்பதை பெண்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண் உறவு முடிந்ததும் திரும்பி படுத்து தூங்கிவிடுவார்கள். இது பெண்களுக்கு மனதளவில் இழப்பை உண்டு செய்வது போல இருக்கும். இதனாலும் பெண் உறவை வெறுக்க செய்யலாம்.
ஆண், பெண்ணை அடிப்பது, கொடுமைப்படுத்துவது, திட்டுவது போன்றவற்றை இயல்பாக செய்துவிட்டு உறவுக்கு நெருங்கும் போது பெண்ணுக்கு வெறுப்பு தான் அதிகரிக்கும். இதனால் உறவில் விருப்பமில்லை. எனக்கு உடல் முடியவில்லை என்று மறுக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் இது குறித்து ஆண்களுக்கு புரியாது.
அன்பும் காதலும் இல்லாத ஆணை பெண் விரும்புவதில்லை. தினமும் ஒரு வார்த்தையாவது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உறவு நேரம் அல்லாமல் இயல்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்த முத்தமிடுவது, கட்டியணைப்பது கடினமான சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றும்.
மேற்கண்ட விஷயங்களில் ஒன்று பெண் உறவுக்கு மறுக்க காரணமாக இருக்கலாம். அன்பும் அரவணைப்பும் காதலும் கொண்ட ஆணை, பெண் எப்போதும் விட்டுகொடுப்பதில்லை. இந்த விஷயங்களில் ஆண்கள் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சியான தாம்பத்தியம் சாத்தியமே.