உலகின் மிக ஏழ்மையான நாடு எது தெரியுமா?
26 Apr,2024
நாள் முழுவதும் உழைத்தாலும் வெறும் 50 ரூபாய்தான் சம்பளம்...
ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்னையாகும், மேலும் உலகின் பல நாடுகள் அதனுடன் போராடி வருகின்றன. அந்த வரிசையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும். உலகின் ஏழை நாடுகளின் பட்டியலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.
இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஒருபுறம், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களை உலகம் தேடுகிறது. அதே வேளையில், பூமியில் இந்த நாட்டில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற நிலையே உள்ளது.
கடந்த காலத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டன. இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. புருண்டியில் 1996 முதல் 2005 வரை நடந்த பெரும் இனக்கலவரம் லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றது. அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மெல்ல மெல்ல இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.
புருண்டியைத் தவிர, மடகாஸ்கர், சோமாலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் போராடி வருகின்றன. புருண்டி மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டாலர்கள், அதாவது ஆண்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் தான். இங்கு 3 பேரில் ஒருவர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். மேலும் ஒருவர் நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள பல ஏழை நாடுகளின் முன்னேறத்திற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்த போதிலும், புருண்டி உட்பட உலகின் பல நாடுகளில் நிலைமை முன்னேற்றமடையவில்லை என்பது தான் உண்மை.