சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
07 Oct,2023
. இனி வரும் காலங்களில் அனைத்து ராசிகளையும் பாதிக்கும், ஏனெனில் நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. சனி பகவானின் இந்த நிலை, சில ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரும்.
சனிப் பெயர்ச்சி பலன்கள்: செயல்களின் கடவுளான சனி எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாரோ, அப்போதுதான் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படும் என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அரசன் போல் வாழ்வார்கள். அதே நேரத்தில், சனி பகவானின் தீய பார்வையும் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது, சனி பகவான் மிக மெதுவாகவே நகரும் கிரகமாகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு தங்கி இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் இனி வரும் காலங்களில் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. அதன்படி வரும் நவம்பர் 4 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் நேரடி இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் பலன் அளிக்கப் போகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி . மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி (Shani Margi 2023) சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். தீபாவளிக்கு முன், உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு நேரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. தொழில் துறையை விரிவுபடுத்துவது பற்றி யோசிக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் முதலாளியிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே சமயம் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.
.
மிதுன ராசி . மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் காதல் உறவில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் ஒரேடியாக நீங்கும். வியாபாரத்தில் உங்கள் பங்குதாரரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் வலுவாக இருக்கும். வழிபாட்டில் ஈடுபடுவதால் மன உளைச்சல் நீங்கும். பணமும் வந்து சேரும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம், அது எதிர்காலத்தில் பலனைத் தரும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் இப்போது அதிக லாபம் உண்டாகும்.
துலாம் ராசி . சனி பகவானின் நிலையில் ஏற்படப் போகும் மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சனி உங்களுக்கு சுகபோகங்களைத் தருவார். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும்.
.
தனுசு ராசி.தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வியாபாரத்தில் உங்கள் நிலை தொடர்பான சில பெரிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த சூழல் இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய திட்டங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் நல்லுறவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.