உள்ளாடையில் வைத்து உயிருடன் கடத்தப்பட்ட பாம்புகள்...
23 Jul,2023
சர்வதேச அளவில் கடத்தல்காரர்கள் பல போக்குவரத்து முறைகளை பயன்படுத்தியும், பல வித்தியாசமான முறைகளிலும் அனுமதிக்கப்படாத பொருட்களை எல்லை விட்டு எல்லை கொண்டு செல்வது தொடர்பான செய்திகளை அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம்.
சில நேரங்களில் ஷூக்களின் அடிப்பகுதியில் அல்லது அணிந்திருக்கும் ஆடையில் நுணுக்கமாக மறைத்து வைத்து பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறு எல்லைகளுக்கு கடத்தி செல்வார்கள். ஆனால் சமீபத்தில் ஒரு பெண் தனது மேலுடலின் அந்தரங்க பகுதியில் மறைத்து வைத்து சீனாவிற்குள் பாம்புகளை கொண்டு வர முற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
குறிப்பிட்ட பெண்ணின் உடல் வினோதமான வடிவில் இருந்ததை கவனித்த சீன சுங்க அதிகாரிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இந்த வித்தியாசமான சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையே ஒரு எல்லைக் கடக்கும் இடத்தில் அந்த பெண்ணின் "வித்தியாசமான" உடல் வடிவத்தை கவனித்த எல்லை பகுதியில் பணியில் இருந்த அதிகாரிகள் கவனித்து இருக்கிறார்கள். அந்த பெண் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி எளிதாக சென்று விடலாம் என்றெண்ணி ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார். ஆனால் அவரது வித்தியாசமான பாடி ஷேப்பை பார்த்ததும் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
.
பெண்ணை சோதனை செய்த போது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் அவரது பிராவுக்குள் உயிரோடிருக்கும் 5 பாம்புகளை ஒரு stockings-ல் அதாவது காலுறைகளில் சுற்றிஅடைத்து மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.
.
பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 பாம்புகளும் உயிரினங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பாம்புகள், கார்ன் ஸ்னேக்ஸ் எனப்படும் பாம்புகள் Red Rat Snakes என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. இது தென்கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும் காணப்படுகிறது. இந்த வகை பாம்புக்கு ஆபத்தான விஷம் இல்லை எனவே பாதிப்பில்லாதது என்று கூறப்படுகிறது.