துக்க நிகழ்ச்சிகளுக்கு காண்டம் எடுத்துச் செல்லும் அமெரிக்கர்கள்... ஏன் தெரியுமா?
01 Jun,2023
அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனம், 18 முதல் 35 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் ஆன்லைனில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் துக்க வீட்டில் தங்கள் சோகத்தையும் வலியையும் மறக்க உடலுறவு கொள்வதாக பலரும் தெரிவித்து அதிர வைத்திருக்கின்றனர். எந்த சூழலுக்கும் தயாராக இருக்க அமெரிக்கர்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மேலும், தனது முதல் டேட்டிங் அனுபவத்துக்கு 65 விழுக்காடு மக்கள் தங்களுடன் ஆணுறைகளை எடுத்துச்செல்வதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
படுக்கை அறையில் கட்டிலுக்கு அருகில் ஆணுறைகளை வைத்துக்கொள்ள 52 விழுக்காடு பேரும், தங்கள் வாலட்டில் எப்போதும் ஆணுறைகளை வைத்துக்கொள்ள 52 விழுக்காடு ஆண்களும் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.