உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக உள்ளன.அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் நாவல் பழம் (நாகப்பழம்)
நாகப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகம் உள்ளன.மலச்சிக்கலை போக்கும் அற்புதமான பழம் ஆகும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, பற்களை சுத்தம் செய்வது, ஈறுகளில் இரத்தக்கசிவை நிறுத்துவது, எடையை குறைப்பது என நாகப்பழத்தின் நன்மைகள் மிகவும் அதிகமானவை ஆகும்.
நன்மைகள்
நாகப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, சோடியம் மற்றும் பல பண்புகள் உள்ளன.சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கவும் நாவல் பழம் மிகவும் பலனளிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.உடலில் படிந்துள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.
சில உணவுப்பொருட்களுடன் நாகப்பழம் இணைந்தால் இது எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்.
நாவற்பழத்தை உண்டவுடன் நாக்கு ஊதா நிறமாக மாறுகிறது இதனால் குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் பிடித்தமானதாக காணப்படுகின்றது.
மஞ்சள்
மஞ்சள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் நாவற்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றோடொன்று வினைபுரிந்து, வயிற்று வலி, பதற்றம் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பால்.
நாகப்பழத்தை ஒருபோதும் பால் அல்லது பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, பாலுடன் சேர்த்து உண்டால் வயிற்று உபாதையை ஏற்படுத்தும் நாகப்பழம் என்பது பலருக்குத் தெரியாது. அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு, இந்த காம்பினேஷன் மேலும் கெடுதல் செய்யும். எனவே, நாகப்பழம் சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பின் உடனடியாக பால் குடிக்க வேண்டாம்.
ஊறுகாய்.
ஊறுகாய் சாப்பிட்டால் உணவின் ருசி கூடும், ஆனால் பெரும்பாலான உணவு நிபுணர்கள் ஊறுகாய் உடலுக்கு கேடு என்று பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே ஆரோக்கியமற்றது என்று சொல்லப்படும் ஊறுகாயுடன் சேர்ந்தால், நாகப்பழம் தீமையையே கொடுக்கும். நாகப்பழம் சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் ஊறுகாயை உட்கொண்டால், வாந்தி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உடல் கோளாறுகள் ஏற்படலாம்.