கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிடும் ஜேர்மனி!
26 Oct,2022
குறைந்த அளவில் கஞ்சா வைத்திருப்பதையும், கேளிக்கை நோக்கத்துக்காக கஞ்சா விற்பனை செய்வதையும் சட்டப்பூர்வமாக்க ஜேர்மனி திட்டமிட்டு வருகிறது. ஒருவர் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதையும், கேளிக்கை நோக்கத்துக்காக வயதுவந்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதையும் சட்டப்பூர்வமாக்கவும் திட்டம் உள்ளதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
ஆனாலும், கேபினட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை முதலில் உறுதிசெய்துகொள்ள ஜேர்மன் அரசு விரும்புதால், திட்டமிட்டபடி அது நிறைவேற்றப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே அது சட்டமாக்கப்படும் என Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
கருப்புச் சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே அரசு அதை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளதாக Karl Lauterbach தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.