பிரிட்டிஷ் ஏர் பிரிட்டன் ஏர் போட்டில் எல்லாம் 6 மணி நேரம் வெயிட்டிங் டைம் !
01 Jun,2022
பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி, பிரிட்டிஷ் ஏர் வேஸ் நிறுவன ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். இதனால் 4ன் காவது நாளாக பெரும் களோபர நிலை காணப்படுகிறது. பிரித்தானியாவில் உள்ள அனைத்து ஏர் போட்டிலும் பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமானங்கள் மிக மிக தாமதமாகவே கிளம்பி வருகிறது. அத்தோடு சுற்றுலா சென்று விட்டு, பிரித்தானியா திரும்ப உள்ள பயணிகளும் பல நாடுகளில் முடங்கியுள்ளார்கள். அவர்களது விமான சேவைகள் ரத்தாகியுள்ளது. எனவே தமிழர்களே நீங்கள் உங்கள் விடுமுறையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் புக் செய்து இருந்தால் ஜாக்கிரதை. உங்கள் விமானம் புறப்பட உள்ளதா ? இல்லையா ? எத்தனை மணி நேரம் தாமதம் என்பது போன்ற தகவல்களை அறியுங்கள்.