சிறுவயதில் பருவமடையும் பெண் பிள்ளைகள்: பெற்றோர்களே ஜாக்கிரதை!
18 May,2022
இன்றைய காலங்களில் பெண் குழந்தைகள் பருவமடையும் வயது என்பது மிகவும் சிறு வயதாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் நம் குடும்பங்களில் காணப்படும் உணவுமுறை மாற்றங்களே. இவ்வாறு சிறுவயதில் பருவமடையும் குழந்தைகள் பாரிய பிரச்சினையை சந்திப்பார்கள் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியவதில்லை.
ஒரு பெண் குழந்தை சராசரியாக பருவமடையும் வயது 10 - 12 வயது. ஆனால் 8 வயதிலேயே பருவமடையும் போது மூளையில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் கர்ப்பப்பை, சினைமுட்டைப்பையின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.
இதனால் எடை, உயரம் உள்பட 12 வயதில் ஏற்பட வேண்டிய வளர்ச்சி அப்போதே நடக்கும். 8 வயதுக்கு குறைவாக ஒரு பெண் குழந்தை பருவமடைந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப உரிய மருந்துகளுடன் மாதவிடாயை குறிப்பிட்ட வயதுவரை நிறுத்தி, மூளையில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
அப்போது உடல் வளர்ச்சியை வயதுக்கேற்றாற்போல் இயல்பாக வைத்திருக்க முடியுமாம்.