ஒரு சிலருக்கு தனியாக சுய இன்பம் மேற்கொள்ளும் போதோ, துணையுடன் உடலுறவு கொள்ளும் போதோ தலைவலி ஏற்படலாம். இவை எதனால் என்று உங்களுக்கு தெரியுமா? அவற்றை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு தனியாக சுய இன்பம் மேற்கொள்ளும் போதோ, துணையுடன் உடலுறவு கொள்ளும் போதோ தலைவலி ஏற்படலாம். இவை எதனால் என்று உங்களுக்கு தெரியுமா? அவற்றை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். கரோனா காலகட்டத்தில் காலை நேரத்தில் உடலுறவு கொள்வது, உடலை புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும்.
அப்படியான, பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. எனவே, நீங்கள் பாலியல் உறவில் மகிழ்ச்சியாக, இருக்கும் பொது ஏற்படும் உடலுறவு சார்ந்த தலைவலி குறித்த விவரங்களின் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
உடலுறவு சார்ந்த தலைவலி ஏன் வருகிறது?
இந்த தலைவலி செக்ஸில் உச்சநிலை ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு அல்லது உச்சநிலை அடைந்தவுடன் அல்லது உச்சநிலை அடைந்து சுமார் 1 முதல் 24 மணி நேரங்களுக்குள் ஏற்படுகிறது
இதன் தலைவலி மிதமானது முதல் தீவிரமானது வரையிலான வலி உணர்வை அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த தலைவலி, சிலருக்கு மூளையில் கட்டி, பக்கவாதம் முதலானவற்றில் பக்க விளைவாகவும் இருக்கலாம். வெறும் தலைவலியாக மட்டும் இருக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. பொதுவாக இந்த தலைவலி மக்கள் தொகையில் சுமார் 1 முதல் 6 சதவிகிதம் வரையிலான மக்களுக்கு ஏற்படுகிறது. .
தீங்கற்ற பாலியல் நேரத் தலைவலி:
கண்ணைச் சுற்றியும், கண்ணுக்குப் பின்னுள்ள பகுதிகளிலும் தொடங்கும் இந்த தலைவலி சில நிமிடங்கள் முதல் பல மணி நேரங்கள் வரை தொடரும் தன்மை கொண்டது. இந்தத் தலைவலிக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் போது நிகழும் கண் கூசுதல், தலைசுற்றல் போன்றவை ஏற்படும். உடலுறவு மேற்கொள்ளும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்குப் பதிலடியாக உருவாகும் தலைவலி இதுவாகும்.
உச்சநிலை தலைவலி:
தலையில் மிதமான வலியாகத் தொடங்கும் இது, அடுத்தடுத்து கழுத்து, தாடை ஆகியவற்றில் ஏற்பட்டு, பாலியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அதுவும் படிப்படியாக அதிகரித்து உச்சநிலை அடையும் போது தீவிர தலைவலியாக மாறும் தன்மை கொண்டது.
காரணங்கள்.. தீர்வுகள்!
பாலியல் உறவு என்பது சில சமயங்களில் மென்மையானது, சில சமயங்களில் வன்மையானது. அப்படியான, உடலுறவின் போது தலைவலி ஏற்படும் சில மக்களுக்கு மட்டுமே பக்கவாதம் முதலான பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மரபுவழிப் பிரச்சனைகள் காரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனினும், இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
உச்சநிலை தலைவலி என்பது வேறு எந்த உடல் பிரச்சனை காரணமாகவும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உடலுறவு சார்ந்த தலைவலி என்பது உறுதி செய்யப்பட்டால், விளக்குகளைக் குறைப்பது, குடிநீர் அருந்துவது, வலி நிவாரணிகளை உட்கொள்வது முதலானவை பயன் தரும்.