ஒமிக்ரோன் மாறுபாட்டால் முதல் மரணம் பதிவானது!வீட்டிலிருந்து வேலை செய்ய
13 Dec,2021
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமிக்ரோனின் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் ‘பிளான் பி’ வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் உள்ளவர்கள் தங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்.
இந்த மாற்றம் இங்கிலாந்தை ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு இணையாக கொண்டு வருகிறது.
ஆனால், நகர மையங்களில் உள்ள சில வணிகங்கள் இந்த நடவடிக்கையால் கிறிஸ்மஸ் வரும்போது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று அஞ்சுகின்றனர்.
முகக்கவசங்கள் குறித்த விதிகள் ஏற்கனவே கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் புதன்கிழமை முதல் இரவு விடுதிகள் மற்றும் பிற பெரிய இடங்களுக்குச் செல்ல கொவிட் கால அனுமதிப் பத்திரங்கள் தேவைப்படும்.
புதிய விதிகள் இருந்தபோதிலும், பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரித்தானியா ‘ஒமிக்ரோன் அவசர நிலையை’ அறிவித்தார்.
பிளான் பி எனப்படும் கூடுதல் நடவடிக்கைகள் கடந்த வாரம் ஓமிக்ரோன் மீது அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டது.