மார்ச் மாதம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?

01 Mar,2021
 

 
 
 நம் அனைவருக்குமே எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதற்காக நம்மில் பலர் ராசிக்கான பலன்களைப் பார்ப்போம். ஜோதிடத்தைக் கொண்டு, ஒருவரது இன்றைய தினம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமின்றி, வரப்போகும் நாட்களும் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். கடந்த மார்ச் மாதம் உங்களுக்கு சற்று மோசமான மாதமாக இருந்திருக்கலாம். ஆனால் மார்ச் மாதத்தில் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது எப்படி தெரிந்து கொள்ள நிச்சயம் உங்களுக்கு ஆவலாக இருக்கும். கீழே 2021 மார்ச் மாதத்திற்கான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலையைப் 
 
 
பொறுத்தவரை நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறுவீர்கள். வணிகர்கள், இந்த மாதத்தில் நிதி பரிவர்த்தனைகளை செய்யும் போது எரிச்சகையாக இருங்கள். சிறு பிழை இருந்தாலும், அது பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். இம்மாதத்தில் நடுவில் உங்கள் வீட்டில் ஒரு பெரிய சர்ச்சை எழலாம். வீட்டு உறுப்பினர்களுடன் வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த மாதத்தில் சற்று அதிக மன அழுத்தத்துடன் இருப்பீர்கள். ஆனால் உங்கள் மனைவின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசும் போது, இம்மாதத்தில் தூக்கமின்மையால் கஷ்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் - 5, 10, 22, 30, 47, 58 அதிர்ஷ்ட நாள் - திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம்
 
 
 ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இம்மாதத்தில் உயர் பதவியுடன் சம்பள உயர்வையும் பெறுவதற்கான நற்செய்தியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். இம்மாதத்தில் உங்கள் உடன் பிறப்புகளுக்கு நல்ல திருமண வரன் வரலாம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்காக இம்மாதத்தில் நிறைய செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருந்தாலும், சிறிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட எண் - 2, 8, 15, 22, 32, 40, 54 அதிர்ஷ்ட நாள் - திங்கள், வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்ட நிறம் - மெரூன், அடர் நீலம், ஆரஞ்சு, கிரீம் 
 
 
மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் கலவையான மாதமாக இருக்க போகிறது. மாதத்தில் ஆரம்பத்தில் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்நேரத்தில் மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்து, ஓய்வெடுத்து வருவது உங்களுக்கு நல்லது. வேலையைப் பொறுத்தவரை, மன அழுத்தத்துடன் பணிபுரிந்தால், உங்களின் செயல்திறன் குறையக்கூடும். எனவே இக்காலத்தில் வேலையில் இருந்து சிறிது ஓய்வெடுப்பது நல்லது. இதனால் நீங்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, நன்கு சிறப்பாக மீண்டும் வேலையில் செயல்படலாம். பணத்தைப் பொறுத்தவரை, இயல்பை விட உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும், வார இறுதியில் ஒரு பெரிய செலவு இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் துணையுடனான உறவு பலப்படுத்தப்படும். மாத இறுதியில் உடன்பிறப்புகளுடன் தகராறு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண் - 2, 18, 20, 33, 48, 51 அதிர்ஷ்ட நாள் - வியாழன், ஞாயிறு, சனி, திங்கள் அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு, ஊதா, சிவப்பு, இளஞ்சிவப்பு 
 
 
கடகம் கடக ராசிக்காரர்கள், இந்த மாதத்தில் வெற்றியை அடைய நினைத்தால் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்துடன் வேலை செய்யாதீர்கள். உங்களின் சில வேலைகள் தடைபட்டால், அதை நினைத்து கவலைப்படாதீர்கள். விரைவில் சரியாகும். வர்த்தகர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் எந்த அவசரமும் வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் நன்றாக இருக்காது. இம்மாதம் மிகவும் சிந்தனையுடன் செலவிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். இம்மாதத்தில் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இதுவரை ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், இந்த மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்ட எண் - 4, 19, 27, 36, 43, 58 அதிர்ஷ்ட நாள் - செவ்வாய், திங்கள், வியாழன், ஞாயிறு அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, அடர் நீலம் 
 
 
சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சில சவால்கள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் ஆரம்பத்தில் உங்களுக்கு நன்றாக இருக்காது. இக்காலத்தில் சில விஷயங்களால் உங்களின் கோபம் உங்கள் அன்புக்குரியவர் மீது அதிகரிக்கக்கூடும். இக்காலத்தில் உங்களின் நடத்தையால் நீங்கள் மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பாதகமான சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. வியாபாரம் செய்பவர்கள், இம்மாதத்தில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். இந்த மாதத்தில் வணிகம் வேகமாக வளரும். இம்மாதத்தில் பல முக்கியமான பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் நீங்கள் முடிப்பீர்கள். வேலை செய்பவர்கள் எந்தவொரு பெரிய மற்றும் நல்ல செய்தியையும் பெறலாம். நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு பெறலாம். உங்கள் ஆரோக்கியம் குறித்து கவலை கொள்வீர்கள். உங்கள் மீது கவனம் செலுத்த நேரம் கிடைக்காமல் போகலாம். இதனால் உங்கள் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படக்கூடும். இம்மாதத்தில் உங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறை அதிகரிக்கக்கூடும். அதிர்ஷ்ட எண் - 2, 8, 17, 31, 45, 52 அதிர்ஷ்ட நாள் - வெள்ளி, வியாழன், செவ்வாய், திங்கள் அதிர்ஷ்ட நிறம் - வெளிர் மஞ்சள், கிரீம், நீலம், பச்சை, மெரூன் 
 
கன்னி கன்னி ராசிக்கார பெண்களுக்கு இந்த மாதம் நல்லதாக இருக்காது. உங்களின் முக்கியமான வேலைகள் தடைபடலாம். இது உங்களின் நம்பிக்கையை தடுமாறச் செய்யலாம். இருந்தாலும், பொறுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் இலக்கில் இருந்து விலக வாய்ப்புள்ளது. வணிகம் செய்பவராயின், இம்மாதத்தில் நிதி நெருக்கடியை சந்திக்கலாம். இம்மாதத்தில் எந்த ஒரு பெரிய முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கைக்கு இம்மாதம் நல்ல காலமாக இருக்கும். குடும்பத்துடன் நல்லுறவைப் பேணுவீர்கள். குறிப்பாக மனைவியுடனான உறவு மிகவும் வலுவாக இருக்கும். காதல் வாழ்வில் மந்தமான தன்மை இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில், அலுவலக வேலை குறித்த உங்கள் கவலைகள் அதிகரிக்கக்கூடும். ஒருவேளை உயர் அதிகாரிகள் உங்களை மிகவும் கண்டிப்பாக கையாள்வார்கள். எனவே உங்களை கட்டுப்படுத்த முயலுங்கள். உடல்நலம் பற்றி பேசினால், அதிகப்படியான கோபம் உங்களுக்கு நல்லதல்ல. இது மனச்சோர்வை ஏற்படுத்தும். அதிர்ஷட எண் - 5, 14, 23, 30, 49, 50 அதிர்ஷ்ட நாள் - சனி, செவ்வாய், வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட நிறம் - கிரீம், ஆரஞ்சு, ஊதா, பச்சை
 
 துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சில சந்தர்ப்பங்களில் சிறந்தாக இருக்கும். சில சமயங்களில் ஏமாற்றமடைவீர்கள். இக்காலத்தில் உங்களின் நடத்தையை அதிகம் கவனிக்க வேண்டும். வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி அனைவரையும் நன்றாக நடத்துங்கள். வேலை செய்பவர்கள், உங்களின் திறனால் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்ல முயலுங்கள். இல்லாவிட்டால், ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். நம்பிக்கையின்றி எந்த வேலையையும் செய்ய வேண்டாம். இல்லையெனில் தவறான முடிவை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, இம்மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். மாத இறுதியில், நீங்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் முடிவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த மாதத்தில் கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட எண் - 1, 7, 14, 24, 30, 45, 59 அதிர்ஷ்ட நாள் - சனி, செவ்வாய், புதன், வெள்ளி அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம், பழுப்பு 
 
விருச்சிகம் வேலை செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கும். இவர்கள் இம்மாதத்தில் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் செய்யும் வேலையை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். இம்மாதத்தில் கிரகங்களின் நிலை வெற்றியை சுட்டிக் காட்டுகிறது. தொழில் தொடங்க விரும்பி, நிதி பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், இம்மாதத்தில் அது தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் மோசமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. எனவே நிலைமையை கையாள முயற்சி செய்யுங்கள். இம்மாதத்தில் அதிக மன அழுத்தம் காரணமாக உங்கள் தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள. உங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரும பிரச்சனைகளை சந்தித்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதிர்ஷ்ட எண் - 6, 19, 28, 37, 44, 58 அதிர்ஷ்ட நாள் - திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமை அதிர்ஷ்ட நிறம் - நீலம், வெள்ளை, அடர் பச்சை, இளஞ்சிவப்பு
 
 
 தனுசு தனுசு ராசிக்காரர்கள் இம்மாதத்தில் முக்கியமான முடிவை எடுக்க நினைத்தால், உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. மற்றவர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்கள். உங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். செய்யும் வேலையை நேர்மையாக செய்ய வேண்டும். இது தவிர, மேலதிகாரிகள் சொல்வதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகத்தைச் செய்தால், இந்த மாதத்தில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடனான உறவில் பிரச்சனை என்றால், அவர்களுடன் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும். உங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு, இம்மாதம் மிகவும் நல்ல மாதம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். இம்மாதத்தில் தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அதிர்ஷ்ட எண் - 3, 5, 17, 21, 36, 48, 50 அதிர்ஷ்டு நாள் - செவ்வாய், சனிக்கிழமை, வியாழன், திங்கள் அதிர்ஷ்ட நிறம் - மெரூன், அடர் நீலம், கிரீம், ஆரஞ்சு 
 
 
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு சமூக வாழ்க்கையில் போதுமான கவனம் செலுத்த இந்த மாதத்தில் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்துடன் ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்க நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். அலுவலகத்தில் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வேலை அல்லது வணிகத்தில் இம்மாதத்தில் சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இருந்தாலும், முழு தைரியத்துடனும், பொறுமையுடனும் செய்தால் இலக்கை அடைவீர்கள். நேர்மறையுடன் இருந்தால், பெரிய வெற்றிகளை காண்பீர்கள். நிதியைப் பொறுத்தவரை, இம்மாதம் சாதாரணமாக இருக்கும். பட்ஜெட் போட்டு செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். மாதத்தின் இறுதியில் உடல்நிலை மோசமடையக்கூடும். ஏற்கனவே உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுங்கள். அதிர்ஷ்ட எண் - 6, 18, 24, 36, 44, 54 அதிர்ஷட நாள் - திங்கள், வியாழன், செவ்வாய், சனிக்கிழமை அதிர்ஷ்ட நிறம் - கிரீம், ஊதா, சிவப்பு, குங்குமப்பூ நிறம் 
 
 
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு, இம்மாதம் பணத்தின் அடிப்படையில் நன்றாக இருக்கும். குறிப்பாக வர்த்தகம் செய்பவர்களுக்கு, எவ்வித சிக்கலும் இல்லாமல் நிதி நன்மையை வழங்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனையில் உங்களுக்கு ஆதரவாக முடிவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இருந்தாலும், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூறுவதானால், உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் குழந்தைகளைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் - 9, 17, 22, 39, 46, 52 அதிர்ஷ்ட நாள் - வியாழன், திங்கள், வெள்ளி, செவ்வாய் அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு, மஞ்சள், நீலம், பழுப்பு 
 
 
மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சற்று நிவாரணம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். இம்மாதத்தில் உங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். இந்நேரம் குடும்ப உறுப்பினர்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேரத்தை கழிப்பீர்கள். வேலை செய்பவர்கள், உடன் பணிபுரிபவர்களுடன் சரியாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களின் மனோபாவம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். வர்த்தகர்களுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிட்டும். யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், அதைப் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். இருப்பினும், யோகா, தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட எண் - 4, 14, 26, 34, 45, 55 அதிர்ஷ்ட நாள் - செவ்வாய், வியாழன், சனிக்கிழமை, திங்கள் அதிர்ஷ்ட நிறம் - பச்சை, ஊதா, சிவப்பு, மஞ்சள்
 Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies