தனது மகளின் மரணத்துக்கு மருமகனின் பாரிய ஆணுறுப்பே காரணம் என முறைப்பாடு
01 Apr,2019
சேர்ந்த ஒருவர், தனது மருமகனின் பாரிய ஆணுறுப்பு காரணமாக தனது மகள் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள மரோன் மாவட்டத்தில் வசிக்கும் 55 வயதான நேதி சிட்டோ என்பவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
நேதி சிட்டோவின் மகளான 23 வயதான யுவதி, சில மாதங்களுக்குமுன், அவரின் வீட்டிலள்ள கட்டிலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில், அந்த யுவதியின் கணவர் பாரிய ஆணுறுப்பை உடையவர் எனவும், இதனால் பாலியல் உறவின்போது, அந்த யுவதி இறந்துவிட்டார் எனவும் உள்ளூர்வாசிகள் பேசிக்கொண்டதை நேதி சிட்டோ கேள்விப்பட்டார்.
இதையடுத்து உள்ளூர் பொலிஸாரிடம் தனது மருமகனுக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்தார். தனது மருமகனின், அசாதாரணமான பாரிய ஆணுறுப்பே தனது மகளின் மரணத்துக்குக் காரணம் என நேதி சிட்டோ தனது முறைப்பாட்டில் தெரிவித்தார்.
நேதி சிட்டோ (வலமிருந்து இரண்டாவது)
இதையடுத்து, அவரின் மருமகனின் ஆணுறுப்பைச் சோதனை செய்ய அதிகாரிகள் தீர்மானித்தனர். உறவினர்கள் மற்றும் கிராமத் தலைவரின் முன்னிலையில் தனது ஆணுறுப்பை காண்பிப்பதற்கு நேத்தி சிட்டோவின் மருமகன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
எனினும், அம்மருமகனின் ஆணுறுப்பானது சராசரி அளவுடையதே என அதிகாரிகள் கண்டறிந்தனர் என பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரியான ரையன்டோ தெரிவித்துள்ளார்.
பின்னர், தனது குற்றச்சாட்டை நேதி சிட்டோ வாபஸ் பெற்றார் எனவும், அவரும் மருமகனும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரினர் எனவும் பொலிஸ் அதிகாரி ரையன்டோ தெரிவித்துள்ளார்.