இந்தியாவில் ஏவுகணைகள் தயார் நிலையில்
29 Sep,2020
சீனாவின் சவாலை எதிர்கொள்ள அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
இதன்படி பிரமோஸ், சப்சானிக் ஏவுகணையான நிர்பய் மற்றும் போர் விமானம் உள்ளிட்ட வான் இலக்கை 40 கிலோ மீட்டர் தூரத்திலேயே தாக்கி அழிக்கும் ஆகாஸ் ஏவுகணைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரமோஸ் ஏவுகணையின் மூலம் 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து சென்று 500 கிலோ மீட்டர் வரை தாக்க முடியும் என்பதுடன், நிர்பய் ஏவுகணை மூலம் 800 கிலோமீட்டர் வரை தாக்க முடியும்.
லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவும் நிலையில் சின்சியாங், திபெத்தில் இந்திய பகுதிகளை குறிவைத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ஏவுகணை, நீண்ட தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சீனா நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிற நிலையில் இந்தியா மேற்படி ஏவுகணைகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.