மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க அரசு புதிய உத்தரவு
26 Sep,2020
'மூன்று வீடுகள் வரை உள்ள குடியிருப்புகளுக்கு, பணி நிறைவு சான்று இன்றி, குடிநீர், மின்சார இணைப்புகள் வழங்கலாம்' என, நகராட்சிநிர்வாகத்துறை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை: பொது கட்டட விதிகள் அடிப்படையில், பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து, சிறிய ரக கட்டடங்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 12 மீட்டர் உயரம் வரை, மூன்று வீடுகள் உள்ள குடியிருப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே போல, 8,070 சதுர அடி பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணி நிறைவு சான்று கேட்காமல், மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் இணைப்புகள் வழங்கலாம் என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.