உலகின் வயதான மனிதர் 113ம் வயதில் மரணம்
14 Aug,2017
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஜெருசலேம்: உலகின் வயதான மனிதர், 113ம் வயதில், இஸ்ரேலில் காலமானார்.
கடந்தாண்டு, உலகின் வயதான மனிதராக, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலை சேர்ந்த, இஸ்ரேல் கிறிஸ்டலை, 113, கின்னஸ் நிறுவனம் அறிவித்தது. இவர், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, போலந்தில், 1903ல், பிறந்தவர்; இரு உலகப் போர்களை பார்த்தவர். 1950ல், இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அடுத்த மாதம், 114ம் பிறந்த நாளை கொண்டாடத் தயாராகி வந்த நிலையில், நேற்று முன்தினம், கிறிஸ்டல் உயிரிழந்தார்.
இது குறித்து, கிறிஸ்டலின் பேரன், ஓரன் கிறிஸ்டல் கூறுகையில், \'\'உலகின் வயதான மனிதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்த கிறிஸ்டல், தன் வாழ்வில் பல சாதனைகள் படைத்தவர்; மிக வேகமாக நடக்கும் பழக்கம் உடையவர். முதலாம் உலகப் போரில், தன் குடும்பத்தினரை இழந்து அனாதையான அவர், 1920ல், குடும்பத்தொழிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார்,\'\' என்றார்.