உலகின் மிக விலையுயர்ந்த செயறகை பல் செட்
03 Jul,2014
துபாயை சேர்ந்த பல் மருத்துவ நிபுணர் ஒருவர் வைரங்கள் பதித்த விலை உயர்ந்த செயற்கை பல் செட்டை உருவாக்கி உள்ளார்.
துபாயில் உள்ள லிபர்ட்டி பல் மருத்துவமன இதை உருவாக்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ 90 லடசங்களாகும். 24 தூய கேரட் தங்கத்தில் வண்ண வண்ண 160 வைரங்கள் அதில் பதிக்கப்பட்டு உள்ளது.இது சிரிக்கும் போது ஒளி தரும் புன்னகையை கொடுக்கும்.இந்த பற்செட்டை தயாரித்த லிபர்ட்டி பல் மருத்துவமனை பெல்ஜியத்தை சேர்ந்த உலக வைர நிறுவனத்திடம் இந்த வைரங்களுக்கான நம்பகத்தன்மை சான்றிதழை வாங்கிவைத்து உள்ளது.ஆனால் இதை வாங்குபவர் இதை ஒரு ஒரு பேஷனாக அணிந்து கொள்ளலாம் ஆனால் இதை அணிந்து கொண்டு உணவு உண்ண கூடாது.
இந்து குறித்து லிபரட்டி பல் மருத்துவமனையை சேர்ந்த டாகடர் மஜித் நஜி கூறியதாவது:-துபாயை சேர்ந்த ஆட்டிஸம் பாதித்தை குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்க இந்த செய்ற்கை பல் செட் உருவாக்கபட்டது. என்று கூறினார்