அவர் என்னை கட்டி பிடித்த போது எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என பாடகி சின்மயி கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு என்னை காம்பரமைஸ் செய்ய பேசிய இயக்குனரின் ஆடியோ இன்னும் பத்திரமாக உள்ளது என அவர் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக அறியப்படுபவர் சின்மயி, கடந்த 2018 ஆம் ஆண்டு #MeToo குற்றச்சாட்டு பிரபலமானபோது கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார் சின்மயி, தான் மட்டுமன்றி சில பெண்கள் கவிஞர் வைரமுத்துவின் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கபட்டதாகவும் அவர் பதிவிட்டார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த அவர், வைரமுத்துவால் தான் பாலியல் துன்புறுத்தல் அனுபவித்ததாகவும், சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின்போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அப்போது தன்னை இனம்புரியாத பயம் ஆட்கொண்டது என்றும் அதனால் அவருடன் இருப்பதுதான் தவிர்த்ததாகவும் ஆனால் அவர் பலமுறை அவர் தன்னை ஓட்டல் அறைக்கு அழைத்ததாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் அப்போது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, அப்போது பலர் அவருக்கு ஆதரவாகவும் பெரும்பாலானோர் அவருக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இப்போது ஏன் சின்மயி கூறுகிறார், ஏன் ஆப்போதே கூறவில்லை என்றும் அவருக்கு எதிராக கேள்வி எழுப்பினர். வைரமுத்துவுக்கு இருக்கும் அரசியல் பலத்தை கருத்தில்கொண்டு அச்சத்தின் காரணமாக அப்போது வெளியில் சொல்லாமல் இருந்து வந்ததாகவும் சின்மயி கூறினார்,
பலரும் அவரை உத்தமர் நல்லவர் எனப் புகழ்ந்து வருவதை ஏற்க முடியாமல் இந்த உண்மையை வெளிப்படுத்துவதாகும் சின்மயி அப்போது தெரிவித்தார். இதில் எந்த விளம்பர உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார், ஆனால் இந்த சர்ச்சை ஆப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் அது அடங்கியும் போனது, இந்நிலையில் மீண்டும் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வைரமுத்துவுக்கும் தனக்கும் அன்று என்ன நடந்தது என்பது குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தெலுங்கர் என்றும், தெலுங்கு நாயுடு என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நான் பக்கா தமிழ் பெண், அதானால்தான் எனக்கு திமிரு அதிகம், என்னுடைய தாய் மொழி தமிழ் தான், சொந்த ஊர் ராமநாதபுரம் நான் பரமக்குடி, என் கணவர் தஞ்சாவூர் எலங்காரம்குடி, கவிஞர் வைரமுத்து என்னிடம் அப்படி நடந்து கொண்டதை போட்டு உடைத்த பின்னர் எனக்குள் ஒரு சுதந்திர உணர்வு ஏற்பட்டது, இன்னும் இவரை நல்லவர் வல்லவர் என்று பேசிக் கொண்டிருக்க தேவையில்லை என்ற சுதந்திர உணர்வு ஏற்பட்டது,
அதேபோல் நான் மட்டும்தான் அவர் மீது குற்றம்சாட்டியதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் என்னைப்போல் நான்கு பேர் அவர் மீது வெளிப்படையாகக் குற்றம் சொல்லி இருக்கிறார்கள், மொத்தம் 17 பேர் இப்படி கூறியிருக்கிறார்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இல்லாததை எண்ணி வருத்தப்படுகிறேன், அவர் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்திருப்பார், அவர் இருக்கும் போதே ஏன் சொல்லவில்லை என்று பலர் கேட்கிறார்கள், ஆனால் அது அப்போது எனக்கு தோன்றவில்லை, எனக்கு நடந்தது உண்மை என்று எனக்கு தெரியும், அதற்கான சில ஆதாரங்கள் இருக்கிறது, ஒரு பெரிய இயக்குனர் எனது தொலைபேசியில் அழைத்து காம்பரமைஸ் பேசலாம் என சொன்ன கால் ரெக்கார் எல்லாம் என்னிடம் இருக்கிறது.
நான் நினைத்தால் எல்லோரையும் நாறடித்து தொங்க விடலாம், ஆனால் அதை செய்ய நான் விரும்பவில்லை, அதே நேரத்தில் என்னை யாராவது கொலை செய்து விட்டால் இந்த ஆதாரத்தை நீங்கள் பிறகு வெளியிடுங்கள் என கூறி சிலரிடம் அந்த ஆதாரங்களை கொடுத்து வைத்திருக்கிறேன், அதற்காக அவர் என்னுடைய மார்பகங்களை தொட்ட வீடியோக்கள் எல்லாம் என்னிடம் இல்லை, அவர் என்னை கட்டி அணைத்த போது ஏதோ தவறாக இருக்கிறதே என்று நான் புரிந்து கொண்டேன், பிறகு அவர் என்னை molested செய்ய ஆரம்பித்தார், அப்போது எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, பிறகு அங்கிருந்து நான் அப்படியே கீழே இறங்கி ஓடி வந்து விட்டேன், என் அம்மா கீழே இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.