வசூலில் ஆரம்பம், தரத்தில் பாண்டிய நாடு
இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் வசூலில் முதலிடத்தை அஜித்தின் ஆரம்பம் பிடித்துள்ளது.
இந்த வருட தீபாவளியில் ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டிய நாடு ஆகிய மூன்று படங்கள் வெளியாகின.
இதில் ஆரம்பம் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அஜித்துக்காகவும், ஸ்டைலான உருவாக்கத்துக்காகவும் ரசிக்கப்படும் படமாக மாறியுள்ளது.
விஷாலின் பாண்டிய நாடு, ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
வசூலில் முதலிடம் ஆரம்பத்துக்கு என்றால், தரத்தில் முதலிடம் விஷாலின் பாண்டிய நாட்டுக்குதான்.
ஆனால் கார்த்தியின் அழகுராஜாதான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இது ராஜேஷின் வழக்கமான படம். அவரது முந்தைய மூன்று படங்களில் பார்த்த அதே பாணி நடிகர்களைத்தான் இந்தப் படத்திலும் காட்டியுள்ளார்.
முதல் வார முடிவில் ஆரம்பம் படம் கிட்டத்தட்ட தன் அசலை வசூலித்துவிட்டதாம், மேலும் பாண்டிய நாடும் வசூலை அள்ளியுள்ளதாம்.
ஆனால் அழகுராஜா வசூலில் தப்பித்துக் கொள்ளும் நிலை என்றாலும் இப்போதைக்கு அதை ஒரு தோல்விப் படமாக ஊடகங்கள் அறிவித்து விட்டன.
ஜெனிலியாவின் கணவரை காபி குடிக்க அழைத்த ஷாரூக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு அலுவலகத்தை டிசைன் செய்து கொடுத்துள்ளார் ரித்தேஷ் தேஷ்முக்.
பாலிவுட்டில் பிரபல நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் கடந்த ஆண்டு ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்டீரியர் டிசைனிங் படித்த ரித்தேஷ் நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் அலுவலகத்தை இவர் செய்து கொடுத்துள்ளார்.
தனது அலுவலகத்தை டிசைன் செய்த ரித்தேஷுக்கு, ஷாருக்கான் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் நன்றி ரித்தேஷ் என்றும் விரைவில் என் வீட்டுக்கு காபி குடிக்க வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பதிலுக்கு ரித்தேஷ் தனது ட்விட்டரில், என் டிசைன்களை பார்க்காமலேயே என் மீது நம்பிக்கை வைத்து ரெட் சில்லீஸ் அலுவலகத்தை டிசைன் செய்ய அனுமதித்ததற்கு நன்றி ஷாருக்கான் என்று தெரிவித்துள்ளார்.