ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகள்: டிரம்ப் அறிவிப்பு
09 May,2019
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்காக அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீற இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஈரானுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் நோக்கில், ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகள் மீது புதிய தடைகளை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை கூறும் போது, “ எண்ணெய் வளத்துக்கு அடுத்தபடியாக ஈரானுக்கு அதிக அளவு வருவாய் கொடுக்கும் துறைகளை இலக்காக்கியுள்ளோம். தனது நடத்தைகளை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஈரான் எதிர்பார்க்க வேண்டியதுதான்” என்று தெரிவித்துள்ளது.