இந்தோனேஷியா கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது
01 Nov,2018
ஜகார்தா : இந்தோனேஷியா கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது. முன்னதாக தென் கிழக்காசிய நாடான, இந்தோனேஷியாவில், ஜகர்தாவுக்கு அருகில், 'லயன் ஏர்' நிறுவன விமானம், கடலில் விழுந்து கடந்த செவ்வாய்க் கிழமை விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த, 189 பேரும் பலியாகினர்.கடந்த 4 நாட்களாக கருப்புப் பெட்டியை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரோன்கள் மற்றும் சோனார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தோனிசியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது