மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1800 ஊழியர்கள் திடீர் நீக்கம்
14 Jul,2022
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. வாஷிங்டன்: உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும் இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.