அறிமுகமாகியது மற்றுமொரு சுவாரஸ்யமான தொழில்நுட்பம்
26 Apr,2017
அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு முடிவு திகதி காணப்படும்.
இன்றைய அவசர உலகில் இவற்றினை அனேகமானவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
ஆனால் அவர்களை எச்சரிக்கை செய்யக்கூடிய புதிய இலத்திரனியல் லேபிள் ஒன்று இம்மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் ட்ரான்ஸ்சிஸ்டர்களைக் கொண்டுள்ள இந்த லேபிள் 2D பிரிண்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பொருட்களின் மீது ஒட்டிவிட்டால் போதும் அவற்றின் விலைகள் மாறும்போதும், முடிவு திகதிகள் நெருங்கும்போதும் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கும்.
எனவே சுப்பர்மார்க்கெட்டில் வழமையான பாரம்பரிய விலை லேபிள்களுக்கு பதிலாக இவற்றைப் பயன்படுத்த முடியும்.
இதேபோல வைன் போத்தல்கள் வெப்பமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்போதும், பாஸ்போர்ட்களின் முடிவுத் திகதி நெருங்கும்போதும் எச்சரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.