வேர்ட் டிப்ஸ்ஸஆல்ட் + எண்கள்:
01 Dec,2016

ஆல்ட் + எண்கள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி
அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. இந்த மேற்கோள் அடையாளக் குறிகள் அப்படியே உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டில் வேறு ஒரு வழி மூலம் ஏற்படுத்தலாம்.
ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0145என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்ட் மூலம் டைப் செய்திட வேண்டும்.
நீளமான வரி தரும் தொல்லை: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.
டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No -Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.
புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.