வாட்ஸ் அப்பில் இழந்த டேட்டாக்களை பெறுவது எப்படி?
14 Oct,2016

வாட்ஸ் அப்பில் இழந்த டேட்டாக்களை பெறுவது எப்படி?
வாட்ஸ் அப் மூலமாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
ஒருவேளை தெரியாமல் நாம் டேட்டாக்களை அழித்து விட்டால் அதை சுலபமாக மீளப்பெறலாம்.
முதலில் நீங்கள் Stellar Phoenix data recovery என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
திரையில் ஜஸ்ட் என்று தோன்று exe. என்ற பைலை இன்ஸ்டால் செய்ய க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதன் வழிகாட்டுதலின்படி செய்தால் மிக எளிதில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
இன்ஸ்டால் செய்த Stellar Phoenix data recovery என்ற ஆப்பை டபுள் க்ளிக் செய்து ஓப்பன் செய்ய வேண்டும்.
அந்த ஆப்பில் நீங்கள் ஆன்லைனிலேயே அதற்குரிய கீயின் உதவியுடன் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
ரிஜிஸ்டர் செய்து முடிந்தவுடன், ஐபோன் அல்லது ஐபேட்-ஐ கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.
வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்ய வேண்டும். இப்போது வாட்ஸ் ஆப் டேட்டாக்கள் அனைத்தும் திரையில் தோன்றும். பின் நீங்கள் இடதுபுறம் உள்ள வாட்ஸ் ஆப் பிரிவியூவை பார்க்க வேண்டும்.
வாட்ஸ் ஆப்பின் இடது புறத்தில் \'Only show Deleted\' என்ற ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த டேட்டாக்கள் அனைத்தும் இருக்கும்.
திரையில் தோன்றும் நீக்கப்பட்டதில் உங்களுக்கு தேவையான டேட்டாக்களை க்ளிக் செய்து, அதை சேவ் செய்து கொள்ளலாம்.