வீடியோ பஃப்பரிங் பிரச்சனையை சரி செய்வது எப்படி?
30 Sep,2016
வீடியோ பஃப்பரிங் பிரச்சனையை சரி செய்வது எப்படி?
ஆன்லைன் மூலம் வீடியோ பார்ப்பது வேகமான இண்டர்நெட் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆன்லைனில் வீடியோ பார்க்கும் போது \"Video is buffering\" என லோடாகும் வரை காத்திருப்பது கொடுமை.
அந்த கொடுமையில் இருந்து மீள இதோ சில வழிமுறைகள்:
1. வீடியோக்களுக்கான ஹார்டுவேர் அக்செல்லரேட்டரை ஆப்டேட் செய்ய வேண்டும். இதனால் சாஃப்ட்வேர் அக்செல்லரேட்டர் குறைந்தளவு வீடியோ ஷட்டரை குறைத்து பஃப்பரிங் பிரச்சனைகளை சரி செய்யும்.
2. வீடியோவினை பிளே செய்யும் முன், மேம்படுத்தப்பட்ட பிளாஷ் பிளேயர் இன்ஸ்டால் செய்ய வேண்டும். மேலும் வீடியோ கார்டு டிரைவர் வீடியோ ஸ்ட்ரீமிங் மென்பொருளுடன் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. சில சமயங்களில் வீடியோவின் தரத்தினை குறைத்து பார்க்கலாம். மிகக் குறைந்த இண்டர்நெட் வேகத்தில் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் வீடியோ பஃப்பர் ஆகாது.
4. மற்ற இண்டர்நெட் சேவைகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு அதன் பின் வீடியோக்களை பார்க்க துவங்கலாம். இவ்வாறு செய்யும் போது இண்டர்நெட் பயன்பாடு குறைக்கப்பட்டு முழு சேவையும் வீடியோ பார்க்க மட்டுமே பயன்படுத்தலாம்.
5. வயர்லெஸ் கனெக்ஷனை விட வையர் மூலம் இணைக்கப் பெற்ற இண்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். எவ்வித தடையுமின்றி வீடியோக்களை அனுபவித்த ஸ்ட்ரீமிங் கருவியினை வையர்லெஸ் சிக்னல் கருவியின் அருகே வைத்து வையர்லெஸ் ரவுட்டரின் சேனல் நம்பரை மாற்றியமைக்கலாம்.