எக்ஸெல் டிப்ஸ்ஸஸ்கிரீன் டிப்ஸ்
25 Apr,2016
ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல்
புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.
2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.
3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don’t Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.
ஒர்க்புக் பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ள
படி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க் ஷீட் மேலாக, சுருக்காமாக properties காட்டும்.
2. அடுத்து Document Properties ஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.
எழுத்தின் அளவை மாற்றிட: மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்ட் வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.