ஆன்டிராய்டு போனை சூப்பரா யூஸ் பண்ணணுமா? வேர்ட்:ஹைபன்:

19 Oct,2014
 

பலரும் ஸ்மார்ட் போனில் உள்ள சில சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளாமலே போனை பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கஸ்டம் காலர் ரிங்டோன்

உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.

பிடித்த விடங்களை சேமிக்க

உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.

பவர் ஸ்ட்ரிப்

ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.

கால் ஸ்கிரீனிங்

ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு - ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.

திகதியை அறிய

ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.

லைவ் வால் பேப்பர்கள்

ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.

டாஸ்க் கில்லர்

பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சூமிங் ஆப்ஷன்

ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் டெஸ்ட்

மெனு - மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.

நேவிகேஷன் ஷார்ட்க்ட்

இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.

பிரவுஸர்

ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்


     வேர்ட்:ஹைபன்:


வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.
1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.

 

4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
வேர்ட்: காப்பி அல்லது மூவ்:
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டினை கிளிப் போர்டில் வைத்திருப்போம். அதனைப் பல இடங்களில் ஒட்ட வேண்டியதிருக்கும். இது சில வேளைகளில் படமாகக் கூட இருக்கலாம். அப்போது வேறு ஒரு டெக்ஸ்ட்டை எடுத்து இன்னொரு இடத்தில் ஒட்ட எண்ணும்போது அதனை காப்பி செய்தால், கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் மறைந்துவிடும். ஆனால், அதனை மீண்டும் காப்பி செய்வது சற்று நேரம் எடுக்கும் செயலாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில், கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடாமலேயே, டெக்ஸ்ட்டை இன்னொரு இட்த்தில் பேஸ்ட் செய்திடும் வழியைக் கடைப்பிடிக்கலாம்.
1. முதலில் வேறு ஒரு இடத்தில் ஒட்ட வேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. தொடர்ந்து Shift+F2 கீகளை அழுத்தவும்.
3. அடுத்து, கர்சரை, டெக்ஸ்ட்டை எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று அமைக்கவும். இனி, என் டர் தட்டினால், டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டப்படும்.
வேர்ட்: டெக்ஸ்ட்டில் ட்ராப் ஷேடோ:
வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். இது அச்சில் வரும்போது, இந்த குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் மற்றவற்றிலிருந்து சற்று உயரமாகத் தனியே காட்டப்படும். இதனை எப்படி அமைப்பது?
1. எந்த பாராவில் ட்ராப் ஷேடோவினை இணைக்க வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும்.
2. பார்மட் (Format) மெனுவில் இருந்து Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders டேப் திறக்கப்பட்ட நிலையில் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டவை காட்டப்படும் இடது புறமான பட்டியலில் Shadow என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. தொடர்ந்து Width drop-down பட்டியலில், கோடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies