பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.

22 Sep,2021
 

 
 
 
"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,
 
 
   
யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
 
1) கேள்வி : ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
 
ஏமாற்றத்தை தந்துள்ளது.
 
சிறிலங்கா தொடர்பில் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த 46/1 தீர்மானத்தை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை பிரதிபலித்துள்ளது. அத்தீர்மானம் காலத்தை நீடிப்பதாக அமைவது மட்டுமல்லாது தமிழர்களுக்கான நீதியினை நீர்த்துக் போகச் செய்கின்ற ஓர் யுத்தியாகவும் காணப்பட்டிருந்தது.
 
தீர்மாமனம் நிறைவேற்றப்பட்டடிருந்த போது 46/1 தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல என எமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம் சிறிலங்காவின் நிலைமைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரது நிலைப்பாட்டை (கடந்தாண்டு) முன்னைய அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் ஆணையாளரின் தற்போதைய வாய்மூல அறிக்கை என்பது சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை அடியொற்றியதானது. அத்தீர்மானம் ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கிய ஆணைக்கு அமைய தனது இந்த வாய்மூல அறிக்கையினை முன்வைத்துள்ளார். இறுதி அறிக்கையே முக்கியமானதாக அமையும் என எதிர்பார்கின்றோம்.
 
அம்மையார், ஐ.நா மனித உரிமைப்பேரவை அடுத்த செய்ய வேண்டியது பற்றி கூற வாய்ப்பு இல்லாவிடினும் மற்றயை நாடுகள் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியவற்றை பரிந்துரைக்காமை ஏமாற்றத்தை தருகின்றது.
 
குறிப்பாக ரொகிங்கா மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலக நீதிமன்றம் தற்காலிக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
 
அதுபோல ஐ.நாவின் இனஅழிப்புக்கான தடுப்புக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்கா விவகாரத்தில உலக நீதிமன்றத்தின் தற்காலிக தடுப்பு நடவடிக்கைக்கான உத்தரவினை ஆணையாளர் கோரியிருக்கலாம். மேலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் நாடுகள் தனிப்பட்ட முறையில் சிறிலங்கா தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உலக நாடுகளை கோரியிருக்கலாம்.
 
ஆனால் இவைகள் ஆணையாளரின் அறிக்கையில் இல்லாமை ஏமாற்றமே.
 
2) கேள்வி : ஆணையாளர் தன்னிடம் பல ஆயிரம் தரவுகள் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளரே ?
 
120 000 தரவுகள் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இவற்றினை சாட்சியமற்ற போரின் சான்றுகளாக கருதலாம் என நினைக்கின்றேன்.
 
'அறிந்து கொள்ளும் உரிமை.....உண்மையினை அறிந்து கொள்ளும் உரிமை' என்ற உரிமைகளின் அடிப்படையில் இந்த சான்றுகளை பாதிக்கப்பட்டவர்களிடம் கையளிக்க வேண்டும். அதற்கான பொறிமுறையினை ஆணையாளர் உருவாக்க வேண்டும்.
 
ஐ.நாவிடம் உள்ள சான்றுகளை வேண்டி பாதிக்கப்பட்டோர் வழிநடத்தும் பன்னாட்டு நீதிக்கான செயல்முனைப்பினை Victim Driven International Justice (VDIJ) 2019ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியிருந்ததனை இவ்வேளையில் ஞாபகப்படுத்துகின்றேன். ஆணையாளர் குறித்துரைத்துள்ள சான்றுகளை இச்செயல்திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் பெறுவார்களாயின், உலக நியாயாதிக்கத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தாங்களே வழக்குகளை தொடுக்க இயலும்.
 
3) கேள்வி : ஆணையாளரின் அறிக்கையினை சிறிலங்கா நிராகரித்துள்ளதே ?
 
நாங்கள் 46/1 தீர்மானத்தின் போது நாங்கள் கூறயிருந்த கருத்தின் படி, சிறிலங்காவுக்கு தோல்வி. ஆனால் தமிழர்களுக்கு நீதியல்ல. அதே அடிப்படையில் தற்போதயை ஆணையாளரின் அறிக்கை, ஜீ.எல்.பீரிசின் 13 பக்க அறிக்கைக்கு, சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு நீதியாக அமையவில்லை.
 
நான் முதலில் குறிப்பிட்டது போல், ஆணையாளர் இதனை உலகநீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது பற்றியோ, அல்லது நாடுகள் தங்களது உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் தமது நாடுகளில் வழங்குகளை கொண்டுவருவதற்கு கூறவில்லை. 46/1 தீர்மானம் முடியும் வேளையில் வெளிவரும் இறுதி அறிக்கையில் இதரைன கூறலாம் என ஆணையாளர் கருத்தியிருக்க கூடும். ஆனால் நீதி தாமாதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதாகவே அமைகின்றது.
 
மற்றும் தமிழினப்படுகொலைக்கு சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான நீதிக்கான செயற்பாட்டில் இருந்து விலகி, மனித உரிமைமீறல் சம்பவங்களை பட்டியலிட்டதான ஓர் உள்நாட்டு அறிக்கையாக ஆணையாளரின் அறிக்கை வந்திருப்பதானது அனைத்துலக பொறிமுறைகள் ஊடான நீதிக்கான செயற்பாட்டை சுருக்கிவிடுகின்றதோ என்ற அச்சத்தையே தருகின்றது.
 
4) கேள்வி : ஐ.நாவுக்கு இலங்கை தமிழரசு கட்சி அனுப்பியதாக கூறப்படுகின்ற கடிதத்தில் விடுதலைப்புலிகளின் போர்குற்றச்சாட்டுக்கள் குறித்தான விவகாரத்தை எவ்வாறு பார்கின்றீர்கள் ?
 
இரண்டரை பக்க கடிதத்தில் ஒன்றே முக்கால் பக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பில் கடந்த காலத்தில் ஐ.நா கூறிய விடயங்கள் வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
 
ஐ.நாவின் மனித உரிமைச்சபைக்கான ஆணையளராக பொறுப்பு வகின்ற ஒருவருக்கு ஐ.நாவினது இந்த அறிக்கைகள் தெரியாது என்பது போல் பட்டியலிட்டு கடிதம் அனுப்பியிருப்பதனை ஆணையாளர் நகைப்புடனேயே நோக்கியிருப்பார். அதவாது ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் பான் கீ மூனின் அறிக்கை, அம்மையாருக்கு தெரியாது போல் கடிதம் அனுப்பபட்டுள்ளது. தமிழர்களுடைய அறிவைப்பற்றி பற்றிய அவர் கேள்விக்கு உட்படுத்தியிருப்பார்.
 
இக்கூட்டத் தொடர் சர்வதேச மனித உரிமைச்சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஒக்ரலண்ட் நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் கூட இவ்வாறு பான் கீ மூனின் அறிக்கையினை அடியொற்றி கடிதங்களை அனுப்பவில்லை. பான் கீ மூனின் அறிக்கையினை குறிப்பிட்ட வகையில் தமிழரசுக்கட்சியின் கடிதம் தனித்துவமான தெரிகின்றது. உண்மையிலேயே சரித்திரத்தை திரும்ப எழுத வேண்டும் என்ற கடப்பாடு தமக்கு இருப்பதாக தமிழரசுக் கட்சி கருத்தியிருந்தால் கடந்த மார்ச் மாதம், ஐ.நாவின் தற்போதயை ஆணையாளர் உட்பட பல முன்னாள் ஆணையளர்கள், ஐ.நா வளப்பெருமக்கள் பலரும் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என பரிந்துரையை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 
மேலும் கடந்த மார்ச் ஆணையாளரின் பரிந்துரையினை அடிப்படையாக வைத்து அடுத்த கட்டம் நோக்கி கொண்டு செல்வதற்கான முனைப்பினை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.
 
அந்த முக்கிய விடயத்தை விடுத்து பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் சரித்திரத்தை திரும்ப எழுத முனைவது விசமத்தனமான செயலாக நாங்கள் பார்கின்றோம். மேலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தி சிறிலங்காவை காப்பாற்றும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது.
 
எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் அனைத்துலக குற்றவியில் நீதிமன்றில் நிருபிக்க தயாராகவுள்ளோம்.
 
5) கேள்வி : தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் திரைமறைவில் பல பேச்சுக்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றதே ?
 
அரசியல் தீர்வு தமிழர் தேசத்துக்கானது. தமிழ்மக்களுக்கானது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கானது. அதனை விடுத்து திரைமறைவில் தீர்வுகளை தீர்மானித்துவிட்டு மக்களின் தலையில் கட்டுவதல்ல அரசியல் தீர்வு.
 
மக்களே தமது அரசியல் தலைவிதியை ஓர் பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும். மக்களுக்கே அந்த உரிமையும் அதிகாரமும் உள்ளது. தேசத்துக்கான அரசியல் இறைமை என்பது மக்களிடம் இருந்துதான் மேலெழ வேண்டும்.
 
நாம் பரிகார நீதியினை வேண்டியிருந்த நிலையில், அனைத்துலக சமூகம் முன்வைத்த நிலைமாறுகால நீதியின் நாலு அம்சங்களில் ஒன்று மீள நிகழாமை தொடர்பானதும், அதற்கான வழிமுறையை காணுதலும் ஆகும். இதனடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் இன்னமும் 13வது அம்ச திருத்ததையே பேசிக் கொண்டு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களே தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை தீர்மானிக்கின்ற உரிமையினை அவர்களுக்கு வழங்க வேண்டும் (the victims to fashion a political framework to ensure a deterrent for mass atrocities).
 
6) கேள்வி : கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை தமிழர் தேசம் சரியாக கையாண்டுள்ளதா ?
 
தமிழர் தேசத்துக்கு என்ற ஓர் இலக்கு இருக்கின்றது. அந்த இலக்கினை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு காலத்திலும் எதிர்கொள்கின்ற சவால்களை உரிய மூலோபாயங்களின் அடிப்படையில் கடக்க வேண்டும்.
 
குறிப்பாக அன்று சுனாமி பேரலை ஏற்பட்டிருந்த வேளையில் தமிழர் தேசம் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு அமைய மனித நேய அடிப்படையில் சுனாமி பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் முன்னெடுப்புகள் நடைபெற்றிருந்தன. அதனை சிங்கள பேரினவாத நீதிமன்றம் அழித்து விட்டது என்பது வேறுகதை.
 
ஆனால் 2009ம் ஆண்டு, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி மக்கள் சொல்லொணாத் பெருந்துயரை சந்தித்திருந்த வேளையில், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஓர் பொதுகட்டமைப்பினை தமிழர் தரப்பு உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யத் தவறிவிட்டோம்.
 
தற்போது இன்றைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் மக்களின் வாழ்வதார மேம்பாட்டுக்கான மனித நேய பொதுக்கட்டமைப்பினை உருவாக்க தவறிவிட்டோம்.
 
தேர்தல், கட்சி அரசியலைக் கடந்து தேசமாக சிந்தித்து காலத்தின் தேவைகளுக்கு அமைய மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து எமது இலக்கு நோக்கி நாம் நகராது விட்டால், தமிழர் தேசம் நிரந்தர ஆக்கிரமிப்புக்கு மட்டுமல்ல, நிரந்தர அடிமைகளாக கையேந்திக் கொண்டிருக்கின்ற நிலைதான் ஏற்படும்.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
 
Transnational Government of Tamil Eelam (TGTE)
 
+1-614-202-3377
 
r.thave@tgte.org



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies