சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு! : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி

15 Dec,2018
 


 
 
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது.
எதை­யேனுந் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி. பேசும் முறை மாற்றமடைய வேண்டும்.
சரி­ச­ம­னாக நின்று பேச வேண்டும். நாம் கோரு­வது கிடைக்­காத போது மாற்று வழி என்ன என்­பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம் என வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சிட்னியில் இருந்து இயங்கும் தாயகம் தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பேட்டியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: - இந்­தி­யாவில் திரா­விடர் கழகம் தொடங்­கி­யதைப் போல – மக்­க­ளுக்­கான ஓர் அமைப்­பாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பித்­தது, அப்­போது அர­சியல் கட்­சி­யாக மாறும் எண்ணம் பேர­வைக்கு இல்லை என்றும் தெளிவாகச் சொல்­லப்­பட்­டது.
ஆனால் அது இப்­போது ஓர் அர­சியல் அமைப்­பாகப் பரி­ணாமம் கண்­டி­ருக்­கி­றது. பேரவை மேடை­களில் அர­சி­ய­லுக்கு இட­மில்லை என்று சொன்ன நீங்­களே இப்­போது பேரவை மேடையில் வைத்து அர­சியல் கட்சி ஒன்றை அங்­கு­ரார்ப்­பணம் செய்த நோக்கம் என்ன? அந்தத் தீர்­மானம் சரி­யா­னதா?
பதில்: - உங்கள் கருத்து தவ­றா­னது. தமிழ் மக்கள் பேரவை இன்றும் ஒரு சுதந்­தி­ர­மான மக்கள் இயக்கம்.
தமிழ் மக்கள் கூட்­டணி என்­பது தமிழ் மக்கள் பேர­வையின் ஒரு அலகோ அல்­லது பரி­மா­ணமோ அல்ல.
அநாத்மா என்ற பௌத்த கொள்­கையை விளக்க வந்த புத்த பெருமான் ஒரு அழ­கான உதா­ர­ணத்தைக் கூறினார்.
ஒரு விளக்கில் இருக்கும் சுடரைக் கொண்டு இன்­னொரு விளக்கை ஏற்­று­கின்றோம். புதிய சுடர் வேறு பழைய சுடர் வேறு.
புதிய சுடர் தானாகத் தனித்து இயங்­கு­வது. அதேபோல் தமிழ் மக்கள் கூட்­டணி சுதந்­தி­ர­மாகச் செயற்­படும் ஒரு கட்சி.
பேர­வையின் கொள்­கை­களும் கூட்­ட­ணியின் கொள்­கை­களும் கிட்­டத்­தட்ட ஒன்­றாக இருப்­பினும் பேரவை வேறு கூட்­டணி வேறு.
தமிழ் மக்கள் பேரவை ஒரு அர­சியல் அமைப்பு அல்ல. அது தொடர்ந்து மக்கள் இயக்­க­மா­கவே செயற்­படும்.
அதில் பல அர­சியல் கட்­சிகள் அங்கம் வகிக்­கின்­றன. தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் அதில் இணைந்து கொள்ளும். கொள்­கை­களில் ஒன்­றி­யைந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூட எங்­க­ளுடன் இணைந்து கொள்­ளலாம்.
வட­மா­காண சபையின் காலம் முடி­வ­டைந்­ததும் தமிழ் மக்கள் பேரவை ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதில் நான் உரை ஆற்­றினேன்.
அதில் தமிழ் மக்கள் கூட்­டணி என்ற ஒரு கட்­சியை ஆரம்­பிக்கப் போவ­தாக மக்­க­ளுக்கு அறி­வித்தேன்.
இந்தக் கட்­சிக்கு தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ர­வையும் அனு­ச­ர­ணை­யையும் கொள்கை ரீதியில் ஒன்­று­பட்­ட­வர்கள் என்ற முறையில் கோரி இருந்தேன். அவ்­வ­ள­வுதான்.
எந்த இடத்திலும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியை தமிழ் மக்கள் பேர­வையின் ஒரு பரி­மாணம் என்று நான் சொல்­ல­வில்லை.
கேள்வி: – தமிழ் மக்கள் கூட்­டணி என்­பது இலங்­கையின் சட்ட வரை­வி­லக்­க­ணப்­படி ஒரு கட்­சி­யாக இருக்­கலாம்.
ஆனால், இலங்­கையில் கூட்­டணி அல்­லது கூட்­ட­மைப்பு என்­பது பல கட்­சிகள் இணைந்த ஒரு கட்­ட­மைப்பே. இவ்­வ­கையில் உங்­க­ளது கட்சி ஒரு தனிக்­கட்­சியா அல்­லது பல கட்­சி­களை ஒரு குடைக்கீழ் இணைக்கும் ஓர் அமைப்பா?
பதில்: - தமிழ் மக்கள் கூட்­டணி என்­பது தனி­யான ஒரு கட்சி. தேர்தல் அர­சி­ய­லிலும் சரி தேர்­த­லுக்கு அப்­பாற்­பட்ட அர­சி­ய­லிலும் சரி, நாம் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் சமூக அமைப்புக்­க­ளு­டனும் இணைந்தே எமது மக்­களின் அர­சியல், சமூக மற்றும் பொரு­ளா­தார நடவ­டிக்­கை­களை மேற்­கொள்ள இருக்­கிறோம்.
பல அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்தே ஒரு கூட்­ட­ணி­யை உரு­வாக்க கோரி­னார்கள். அதைச் செய்­துள்ளோம்.
எமது செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் நாம் எல்­லோ­ரு­டனும் ஒன்­று­பட்டு ஒன்­றி­ணைந்தே செயற்­ப­டுவோம்.
அந்­த­வ­கையில், பல கட்­சிகள், சமூக அமைப்­புக்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களை ஒரு குடையின் கீழ் கொண்­டு­வந்து செயற்­படும் அமைப்­பாக எமது கட்­சியை நீங்கள் பார்க்­கலாம்.
கேள்வி: – அர­சியல் கட்சி என்று வந்­து­விட்டால் உங்­க­ளுக்­கென அர­சியல் அபி­லா­ஷைகள் இருக்கும். அவற்றைச் சென்­ற­டைய கொள்கை வெளியீடு , தேர்தல் விஞ்­ஞா­பனம் என்று வெளிப்­ப­டை­யான பிர­க­ட­னங்கள் வர­வேண்டும்.
அவற்றில் பல மிகைப்­ப­டுத்­தப்­பட்ட வாச­கங்கள் இருக்கும். இலங்­கையில் என்­றல்ல, ஜன­நா­யக நாடுகள் எதி­லுமே வெல்லும் கட்­சி­க­ளா­லேயே தமது தேர்தல் பிர­க­ட­னங்­களை நிறை­வேற்ற முடி­வ­தில்லை.
அந்­நி­லையில் அமோக வெற்றி பெற்­றாலுங் கூட தேசிய மட்­டத்தில் ஒரு சிறு­புள்­ளி­யாக மட்­டுமே இருக்­கப்­போ­கின்ற உங்கள் அமைப்­பினால் என்ன மாற்­றங்­களை செய்ய முடியும்?
பதில்: - நிச்­ச­ய­மாக முடியும். ஒரு சில தனி நபர்­களின் அடிப்­ப­டையில் அல்­லாது அவர்­களின் தனிப்­பட்ட கருத்­துக்­களின்  அடிப்­ப­டையில் அல்­லாது, நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டு­களை ஒரு கட்­சி­யாக மேற்­கொள்ளும் போது நிச்­ச­ய­மாக மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும்.
நீண்ட கால அடிப்­ப­டை­யிலும் பல நன்­மை­களை இது கொண்­டு­வரும். தமிழ் மக்­களின் ஏகோ­பித்த கருத்து இது தான் என்று மத்­திய அர­சாங்­கமும் வெளியு­ல­கமும் உணர்ந்து கொண்­டதும் அவர்கள் அதற்­கேற்­ற­வாறு தம்மை மாற்றிக் கொள்­வார்கள். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் இப்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.
கேள்வி: – தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் கொள்­கைப்­பி­ர­க­டனம் எப்­போது வெளிவர இருக்­கி­றது? இந்த அமைப்பின் மற்­றைய முக்­கிய தலை­வர்கள் யார்?
பதில்: - எமது அமைப்பின் யாப்பு மற்றும் கொள்கை பிர­க­ட­னங்­களை தயார் செய்யும் பணிகள் முடியும் தறு­வாயில் இருக்­கின்­றன.
நேற்றுக் கூட இது பற்றி ஆரா­யப்­பட்­டது. விரைவில் அவற்­றையும் எமது கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள், சின்னம், கொடி ஆகி­ய­வற்­றையும் மக்­க­ளுக்கு அறி­விப்போம். எம் மக்­க­ளிடம் இருந்து எனக்குக் கிடைக்கும் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் போற்­றப்­பட வேண்­டி­யவை. அவர்கள் மத்­தியில் இருந்தே தலை­வர்கள் முன் வரு­வார்கள்.
கேள்வி: தற்­போது கூட்­ட­மைப்பில் உள்ள எந்­த­வொரு கட்­சியோ அல்­லது ஈ.பி.­டி.­பி.யோ உங்­க­ளது கூட்­ட­ணியில் வந்து சேர­வேண்டாம் என்று நீங்கள் சொல்­லி­யி­ருப்­ப­தாகச் செய்­திகள் வந்­தி­ருந்­தன.
ஆனால், சில உள்­ளாட்சி சபை­களில் அதே கட்­சி­க­ளுடன் அல்­லது உங்கள் தராசில் அத­னிலும் மோச­மா­னவை என்று கரு­தப்­படும் கட்­சி­க­ளு­டனும் கூட்டு வைத்­துள்ள ஈ.பி.­ஆர்.­எல்.எப். மற்றும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை எப்­படி உங்கள் கூட்­ட­ணியில் இணைக்­க­மு­டியும் என்ற கேள்­விக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: – தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்ட நாள் முதல் ஈ.பி.­ஆர்.­எல்.எப். எம்­முடன் இணைந்து செயற்­பட்டு வரு­கி­றது.
எழுக தமிழ் நிகழ்­வுகள், தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வுத் திட்டம் போன்ற பல விட­யங்­களை நாம் ஒன்­றா­கவே மேற்­கொண்­டி­ருந்தோம்.
எங்­கேனும் தவ­றுகள் இடம்­பெற்­றி­ருந்தால் அவை மீண்டும் இடம்­பெ­றாமல் இருப்­ப­தற்­கான பொறி­மு­றை­களை அமைத்து நாம் செயற்­பட பழ­கிக்­கொள்ள வேண்டும்.
கொள்கை அடிப்­ப­டை­யிலும் பரஸ்­பர நம்­பிக்கை அடிப்­ப­டை­யி­லுமே நாம் ஈ.பி.­ஆர்.­எல்.எப். மற்றும் ஏனைய கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைப்போம்.
இவற்றில் எந்தக் கட்­சி­யேனும் இணங்­கப்­பட்ட கொள்­கைக்கு முர­ணா­கவும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­கவும் நடந்­து­கொண்டால் அவர்­க­ளு­ட­னான உறவை தமிழ் மக்கள் கூட்­டணி முறித்­துக்­கொள்ளும். ஈ.பி.­டி.­பி. போன்ற சில கட்­சிகள் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ராக நடந்து வரு­கின்­றன என்­பதில் எனக்கு எள்­ள­ளவும் சந்­தேகம் இல்லை.
அவர்­க­ளுக்குப் பணமே முக்­கியம். கொள்­கைகள் முக்­கி­ய­மல்ல. ஆகவே அவர்­க­ளுக்குத் தூரப் பார்வை இல்லை என்றே கொள்ள வேண்­டி­யுள்­ளது.
கேள்வி: - சாம பேத தான தண்டம் என்று எல்லாத் தந்­தி­ரங்­க­ளையும் உத்­தி­க­ளையும் தமி­ழர்கள் பாவித்து முடித்­து­விட்­டார்கள்.
இப்­போது மக்கள் இயக்கம் என்ற நிலை­யி­லி­ருந்து அர­சியல் அமைப்­பாக வந்­த­வுடன் “அர­சாங்­கத்­துடன் தடைப்­பட்டுப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிக்கும் பொருட்டு உள்­நாட்­டிலும்  சர்­வ­தேச சமூ­கத்தின் ஊடா­கவும் அழுத்தம் கொடுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்” என்று சொல்­லு­கி­றீர்கள்.
சர்­வ­தேச சமூகம் எமக்கு எந்த அள­வுக்குத் தோள் கொடுக்கும் என்று நம்­பு­கி­றீர்கள்? அவர்­களை மட்டும் நம்பி இறங்­கி­விட்டு, தமது பூகோள அர­சியல் நலன்­களைக் கருத்தில் கொண்டு அவர்கள் பின்­வாங்­கினால், தொடர்ந்து செல்­வ­தற்கு என்ன உபா­யங்­களைத் தமிழ் மக்கள் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றது?
பதில்: - நாம் எல்­லா­வற்­றையும் முயற்­சித்து விட்டோம். இனி செய்­வ­தற்கு ஒன்றும் இல்லை என்று கூறு­வது தவறு.
நாம் இது­காறும் எமது பிரச்­சி­னை­களை சிங்­கள மக்­க­ளுடன் மனம் விட்டுப் பேச­வில்லை. எமக்கு எதுவும் கிடைக்­காது என்ற மனோ­நி­லையில் கிடைப்­பதைச் சுருட்டிக் கொள்வோம் என்­ற­வா­றா­கவே நாங்கள் இது­வ­ரையில் பேசி வந்­துள்ளோம்.
ஆனால் இந்த சலிப்பு, போராட்­டத்தில் ஈடு­படும் எல்லா இனங்­க­ளுக்கும் ஏற்­ப­டக்­கூ­டிய ஒன்­றுதான்.
ஆனால், இந்த சலிப்பைக் கண்டு மனம் தள­ராமல் கடந்த காலங்­களில் இருந்து பாடங்­களைப் படித்­துக்­கொண்டு எமது வழி­மு­றை­களை நாம் வகுக்­க­வேண்டும். தமிழ் மக்கள் கூட்­டணி அவ்­வா­றான சில வழி­மு­றை­களை வகுத்­துச் செ­யற்­படும்.
இவற்றை ஆழ­மாக இங்கு கூற­மு­டி­யாது. ஆனால் தமிழ் மக்கள் பேர­வையில் ஆற்­றிய உரையில் அவற்றைக் கோடிட்டு காட்டி இருக்­கின்றேன்.
சர்­வ­தேச சமூ­கத்தில் மட்டும் நாங்கள் நம்­பி­யி­ருக்­கின்றோம் என்று நீங்கள் நினைத்தால் அது சிறு­பிள்­ளைத்­த­ன­மான சிந்­தனை என்­பதே எனது பதில்.
கேள்வி: – 2009ஆம் ஆண்டின் பின் மக்­களின் மனக்­க­ருத்து மாறி­யி­ருக்­கி­றது. இவ்­வ­ளவு உச்­ச­நிலைத் தியா­கங்­க­ளு­டனும் இழப்­பு­க­ளு­டனும் எடுத்த முயற்­சியே வெல்­லாது போய்­விட்­டது என்ற சலிப்­புடன் அவர்கள் தம்மை நிலைப்  படுத்­திக்­கொண்டு போக முற்­ப­டு­கி­றார்கள்.
இந்­நி­லையில் ஒரு வன்­போக்கு நிலைப்­பாட்­டுக்கு ஆத­ரவு தர அவர்கள் தயா­ராக இல்லை என்ற கருத்து அவ­தா­னிகள் மத்­தியில் இருக்­கி­றது.
இலங்கை என்ற ஒரே நாட்­டுக்குள் தான் எமது பிரச்­சனை தீர்க்­கப்­ப­ட­வேண்டும் – தீர்க்­கப்­படும் என்­பது தான் உங்­க­ளி­னதும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யி­னதும் எத்­தனம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வீர்­களா?
பதில்: - விசித்­தி­ர­மான கேள்வி. இலங்கை நாட்டில் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு ஒன்றைக் காணு­வதே தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் இலக்கு. அந்த இலக்கை வைத்தே எமது நகர்­வுகள் நடை­பெ­று­கின்றன.
கேள்வி: - தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை விமர்­சிக்கும் நீங்கள், தமிழ் மக்கள் பிரச்­சி­னைக்கு எவ்­வ­ழி­யாகத் தீர்வைப் பெறலாம் என தேர்­த­லுக்கு முன்னர் மக்­க­ளுக்கு விளக்­கு­வீர்­களா? உங்கள் விருப்­புக்­கு­ரிய வழி சரி­வ­ரா­து­விட்டால் மாற்­று­வ­ழித்­திட்டம் யாது?
பதில்: – குறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டங்­க­ளுடன் நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டு­களின் ஊடாக அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றைச் சமாந்­த­ர­மாக நாம் முன்­னெ­டுத்துச் செல்ல உத்­தே­சித்­துள்ளோம்.
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது. எதை­யேனும் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி.
பேசும் முறை மாற்­ற­ம­டைய வேண்டும். சரி­ச­ம­னாக நின்று பேச வேண்டும். நாம் கோரு­வது கிடைக்­காத போது மாற்று வழி என்ன என்­பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். எமது சிந்­த­னை­களும் செயல்­களும் இறை­யா­சி­யுடன் நடை­பெறுவன.
கேள்வி: - கனவான் அர­சியல், புரிந்­து­ணர்வு அர­சியல், இணக்க அர­சியல், சர­ணா­கதி அர­சியல் போன்ற பல வடி­வங்­களில் தேசிய மட்­டத்தில் தமிழர் அர­சியல் இருந்­தி­ருக்­கி­றது.
அர­சி­யலில் உங்­க­ளுக்கு விரும்­பிய விதத்தில் மக்கள் ஆத­ரவும் பிர­தி­நி­தித்­து­வமும் உங்­க­ளுக்கு இருக்­கி­றது என்று ஒரு நிலைமை இருந்தால் உங்கள் அணு­கு­முறை எப்­படி இருக்கும்?
பதில்: - அப்­ப­டி­யான ஒரு சந்­தர்ப்­பத்தில் அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் இயன்­ற­ள­வுக்கு எல்லா மக்­க­ளையும் ஈடு­ப­டுத்தி செயற்­ப­ட­மு­யற்­சிப்பேன்.
மக்­களின் ஆலோ­ச­னை­களும் பங்­கு­பற்­று­த­லுமே உண்­மை­யான பல­மாகும். ஓரி­ரு­வரின் கனவான் அர­சி­யலும் சர­ணா­கதி அர­சி­யலும் பல­மாகா.
(தொடரும்)



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies