படையினரிடம் ஒரே தருணத்தில் சரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது?- விபரங்களை கோருகின்றன சர்வதேச அமைப்புகள்

12 Dec,2018
 


 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த 2009 மே 18- 19ம் திகதிகளில் படையினரிடம் சரணடைந்தவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து இலங்கை இராணுவம்  காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பதிலளிக்கவேண்டும் என  இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் இரு சர்வதேச அமைப்புகளே இந்த அறிக்கையை விடுத்துள்ளன.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மனித உரிமை தர ஆய்வு குழு ஆகிய அமைப்புகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதிகளவானவர்கள் காணாமல்போன நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் 500 பேர் ஒரே இடத்தில் ஒரே தருணத்தில் காணாமல்போனமை மிக முக்கியமான விடயம் ஒரே தருணத்தில் பெருமளவானவர்கள் காணமற்போன சந்தர்ப்பம் இது என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
2009 இல் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின்  பாரிய எண்ணிக்கை காரணமாக இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்  என  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான  திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் இதற்கு பதிலாக ஒரு வருடம் கடந்துவிட்டது, இன்னமும் எவரும் 58 வது படைப்பிரிவின் தளபதியாகயிருந்தவரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் பகுதியிலிருந்து வந்தவர்கள் படையினரிடம் சரணடையும்போது அப்பகுதியில் 58 படைப்பிரிவின் தளபதி காணப்பட்டார் என ஐநாவி;ன் தகவல்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்கள் மூலம் அறிய முடிந்துள்ளது என  யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு ஜெனரல் தரத்திற்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதும் இதன் காரணமாக அவர் இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமையும் காணாமல்போனவர்களின்  குடும்பத்தவர்களிற்கு செய்யும் அவமரியாதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தவர்களிற்கு பதில் வழங்கப்படவேண்டும்,அவர்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது  காணாமல்போனவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஐடிஜேபி கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது தற்போது அதனிடம் 300 பேரின் படங்களும் பெயர்களும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
2011 இல் நாங்கள்  சரணடைந்தவேளை காணாமல்போன 20 பேரின் விபரங்களை பெற்றோம்,2014 இல் அது 103 ஆக அதிகரித்தது,இவ்வருட ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரித்தது தற்போது  எச்ஆர்டீஏஜி அமைப்பு சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 500ற்கும் அதிகம் என கருதுகின்றது என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies