மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன?

04 Aug,2018
 

 
 
இவ்­வாரம் இலங்கை அர­சி­யலில் அதி­க­மாக மக்­களால் பிரஸ்­தா­பிக்­கப்­பட்ட பத்­தி­ரிகை செய்­தி­களில் மிக கவ­னத்தை ஈர்த்த செய்­தி­யாக பேசப்­ப­டு­வது. எதிர்க்­க­ட்­சித் தலைவர் இரா. சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வுடன் உரை­யா­டி­ய­தாக கூறப்­ப­டு­கின்ற விடயம் .மற்­றொன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­யம் ­செய்து ஆற்­றிய உரை. இன்­னொன்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்­வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உரு­வா­கலாம் என்ற கருத்து.
பிர­தமர் ரணில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த வேளை வடக்கு மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களின் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கட­னினை பதி­ல­ளிப்பு செய்யும் செயற்­றிட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போது காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­கா­ரத்தில் யாருக்கு தண்­டனை வழங்­கு­வது யாழ்ப்­பாணம் கொழும்பின் கால­னித்­துவ பகு­தி­யல்ல என்ற கருத்தை கூறி­யி­ருந்தார். இது ­போ­லவே சந்­தி­ரிகா அம்­மையார் தமிழ் மக்­களின் உரி­மைகள் அர­சியல் அமைப்­பி­னூ­டாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட ­வேண்டும். இல்­லையேல் வடக்கில் ஏற்­பட்­டது போன்ற பிரச்சினைக்கு முகங்­கொ­டுக்­க­ வேண்­டி ­வரும். புதிய அர­சியல் அமைப்பை தாமதப்­ப­டுத்­தினால் நல்­லி­ணக்கம் பாதிப்­ப­டையும் என சந்­தி­ரிகா அம்­மையார் எச்­ச­ரித்­துள்ளார்.
இவ் ­வா­ரத்தின் மிக முக்­கி­ய­மான சந்­திப்­பா­கவும் அர­சியல் நகர்­வாகவும் பேசப்­ப­டு­கின்ற விடயம் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் இரா. சம்­பந்­த­னுடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பாதுகாப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் உரை­யா­டிய விவ­கா­ரங்­க­ளாகும்.
சீன மக்கள் இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழாவை முன்­னிட்டு சீன ­தூ­து­வ­ரா­லயம் ஏற்­பாடு செய்­தி­ருந்த 23.7.2018 நிகழ்வில் சந்­தித்த வேளையில் மஹிந்த ராஜ­ப­க் ஷ மற்றும் கோத்­த­பாய ராஜ­
ப­க் ஷ ஆகிய இரு­வ­ரு­டனும் தான் கலந்­து­ரை­யா­டி­யது பற்றி இரா. சம்­பந்தன் கருத்து தெரி­விக்­கையில். பல­ நெ­ருக்­க­டி­யான விட­யங்கள் குறித்து இரு­வரும் நீண்­ட ­நேரம் என்­னுடன் உரை­யா­டினர். அர­சியல் ரீதி­யாக அடுத்த கட்ட செயற்­பாடு குறித்தும் வடக்கில் முன்­னெ­டுக்­க­வி­ருந்த செயற்­பா­டுகள் தற்­பொ­ழுது ஏன் தடைப்­பட்­டுள்­ளன என்ற கார­ணி­களை அவர்கள் இரு­வரும் என்­னிடம் முன்­வைத்­தனர் என எதிர்க்­கட்சி த­லைவர் தெரி­வித்­தி­ருந்தார்.
தீர்­வினை நோக்­கிய பய­ணத்தை முன்­னெ­டுக்கும் புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் நீங்கள் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­ வேண்­டு­மென அவ்­வி­ரு­வ­ரையும் தான் கேட்­டுக்கொண்­ட­தா­கவும் சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார். சம்­பந்தன் மேலும் தெரி­விக்­கையில் தாம் மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு தம்­முடன் இணைந்து நாட்­டினை முன்­னோக்கி கொண்டு செல்ல ஒத்­து­ழைப்பு நல்கி தமிழ் மக்­களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்­வ­ர­ வேண்டும் .எனவும் தாம் தமிழ் மக்­களின் உரி­மை­களை ஜன­நா­ய­கத்தை பறிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யெ­னவும் மஹிந்த கூறி­ய­தாக சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்­தார்.
சம்பந்தனுடனான உரை­யா­டலில் மஹிந்த இன்­னும் ­பல விட­யங்­களை மனம்­ விட்­டு­ பே­சி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவை யாதெனின்.
மீண்டும் தாம் அதி­கா­ரத்­துக்கு வந்­ததும் தமிழ் மக்­க­ளுக்­கான பிரச்சினை­யை­ பேசி தீர்க்க முடியும் அதற்கு தமிழர் தரப்பு ஒத்­து­ழைக்­க­ வேண்டும்.
எங்­க­ளுடன் இணைந்து கூட்­ட­மைப்பு செயற்­ப­ட­ வேண்டும்.
வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட ­வேண்டும்.
தமிழ் மக்­களின் பிரச்சி­னை­க்கு தீர்வு காணப்­ப­டா­விட்டால் புதிய அர­சியல் சக்­திகள் உரு­வாகும் ஆபத்து ஏற்­படும் என்­பது பற்­றி­யெல்லாம் மஹிந்­தவும் கோத்­தாவும் விலா­வா­ரி­யாக பேசி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
முதலில் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் மேற்­படி இரு­வ­ரி­டமும் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆக்கபூர்­வ­மாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­ வேண்­டிய விடயம் தீர்­வு­களை நோக்­கிய பய­ணத்தை முன்­னெ­டுக்கும் புதிய அர­சியல் அமைப்பு விட­யங்­க­ளுக்கு தங்­களின் பூரண ஆத­ரவு வேண்­டு­மென சம்­பந்தன் மஹிந்­த­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார். இது ­போன்ற கோரிக்­கை­களை இதற்கு முன்னும் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பகி­ரங்­க­மா­கவும், பக்­கு­வ­மா­கவும் பல தட­வைகள் விடுத்­துள்ளார். உதா­ர­ண­மாக 2015 ஆம் ­ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்டு சம்பூர் விடு­விக்­கப்­பட்­ட ­வே­ளையில் எதி­ர்க்­கட்­சித் ­த­லைவர் பகி­ரங்­க­மாக இக் ­கோ­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார். ஆனால் எந்­த­வொ­ரு­ சந்­தர்ப்­பத்­திலும் மஹிந்த அணி­யினர் அதை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவோ ஒப்­புக்கொண்­ட­தா­கவோ சாடை மாடை­ காட்­டப்­ப­ட­வில்லை. மாறாக புதிய அர­சியல் யாப்பை முன்­னெ­டுப்­பதை மஹிந்த அணி­யினர் கடு­மை­யாக எதிர்த்­து­ வந்­தனர். புதிய அர­சியல் யாப்­பா­னது தமிழ் ஈழத்­துக்­கான முயற்சி நாட்டை துண்­டா­டு­வ­தற்கு உண்­டாக்­கப்­பட்­டி­ருக்கும் சதி இதை நிறை­வேற்ற ஒரு­போதும் நாம் அனு­ம­திக்­கப் ­போ­வ­தில்­லை­யென கடு­மை­யான எதிர்ப்பை காட்­டி ­வந்­தனர் மஹிந்த அணி­யினர்.
உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களை கடு­மை­யாக விமர்­சித்­தது மாத்­தி­ர­மன்றி வழிப்­ப­டுத்தல் குழுவை அங்­கீ­க­ரிக்­கா­த­வர்­க­ளாகவே அவர்கள் காணப்­பட்­டனர். உண்மை நிலை­யை ­கூ­றப்­போனால் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புகள் தேங்­கி ­போ­ன­தற்கு காரணம் இவர்­களின் கடு­மை­யான எதிர்ப்­புகள். இந்த அணி­யி­னரின் கடு­மை­யான எதிர்ப்பை தாங்க முடி­யா­ததன் கார­ண­மா­கவே நல்­லாட்சி அர­சாங்கம் தனது முயற்­சி­களை இழுத்­த­டிப்பு செய்­தது என்­பது வளிப்­ப­டை­யான உண்­மை­யாகும்.
13க்கு அப்பால் சென்று தீர்வை நல்­குவேன் என்று வாக்­குறுதி நல்­கிய முன்னாள் ஜனா­தி­பதி தனது ஆட்சிக் காலத்தை எப்­படி இழுத்து சென்­றா­ரென்­பது சாதா­ரண பாம­ரனும் விளங்­கி­கொண்ட யதார்த்­த­மாகும்.
நல்­லாட்சி அர­சாங்கம் மூன்று வரு­டங்­களை மிக வெற்­றி­க­ர­மாக கடத்­தி­விட்­டது. அமைச்சர் மனோ­க­ணேஷன் சுட்­டிக்­காட்­டி­ய­து போல் தேசி­ய ­பி­ரச்­சி­னையை தீர்க்­க­ வேண்­டு­மென கடந்த மூன்று வரு­டங்­களில் உரு­வாக்க முடி­யாத புதிய அர­சியல் அமைப்பு எதிர்­வரும் ஒன்­றரை வரு­டத்தில் உரு­வாக்­க ­மு­டி­யுமா என வினா எழுப்­பி­யுள்ளார்.
நிபுணர் குழுவை பயன்­ப­டுத்தி இர­க­சி­ய­மான முறையில் அர­சியல் அமை­ப்பு வரைபை கொண்டு வரு­வ­தற்கு கூட்­ட­மைப்பு முயற்­சிப்­ப­தாக கூட்­ட­மை­ப்பின் மீது கூட்டு எதிர்க்­க­ட்­சி­யினர் குற்றம் சாட்­டு­வ­தி­லி­ருந்தே புதிய அர­சியல் அமைப்பு நிைல­மைகள் எவ்­வாறு தலைகீழா­க போகின்ற­தென்­பது வளிப்­ப­டை­ய­ாகவே தெரி­கி­றது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ எதிர்க்­க­ட்சி தலை­வரை கேட்­டுக் கொண்ட விட­ய­ங்­கள் தொடர்பில் தமிழ் மக்கள் எத்­த­கைய அபிப்­பி­ரா­யங்­களை கொள்­ள­ மு­டியும் என்­ப­து­ பற்றி கவ­னிப்­போ­மாயின்
மீண்டும் நாம் அதி­கா­ரத்­துக்கு வருவோம். வரும் பட்­சத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான பிரச்சி­னையை பேசித் தீர்ப்போம் அதற்கு தமிழர் தரப்பு ஒத்­து­ழைக்­க­ வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மிக கவ­ன­மாக மஹிந்த உரை­யா­டி­யுள்ளார். மீண்டும் நாம் ஆட்­சிக்கு வரு­வோ­மென்ற அவரின் அதீத நம்­பிக்கை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் பல­வீ­னத்­தையும் செல்­வாக்கு இழப்­புக­ளையும் மறை­மு­க­மாக சுட்­டிக்­காட்­டு­வ­தாக உள்­ள­தோடு தமிழ்­மக்கள் எதிர்­கா­லத்தில் எமக்கு ஆத­ரவு நல்­கு­வதன் மூலமே எதை­யா­வது பெற வாய்ப்­பி­ருக்­கி­றது என்ற மறை ­பொ­ருளை மிக பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­யத்­து­டனும் வளிப்­ப­டுத்­தி­யுள்ளார். மஹிந்த காரணம் கடந்த காலத்தில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக தமிழ் மக்கள் எவ்­வாறு செயற்­பட்­டார்கள் என்ற அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் இவை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வின்றி ஜனா­தி­ப­தி­யாக வர ­மு­டி­யு­மென்ற நம்­பிக்­கையில் வீராப்பு பேசிக்கொண்­டி­ருந்த தரப்­பினர் தமது இந்­த­ வளிப்­ப­டுத்­தலின் மூலம் சிறு­பான்­மை­யி­னரின் அவ­சி­யத்தை உணர்ந்து அடி­யிட நினைக்­கி­றார்­களா என்­பதை மிக கவ­ன­மாக எதிர் ­கொள்­ள­ வேண்­டிய தேவை தமிழ் தலை­மை­க­ளுக்கு உண்டு. இதற்கு அப்பால் பயன்­ப­டுத்­த ­வேண்­டிய சூழ­லையும் புரிந்து கொள்­ள­ வேண்டும்.
தமிழ் மக்­களின் பிரச்சி­னை­களை பேசி ­தீர்க்­க ­மு­டி­யு­மெ­ன்­பது ஒரு பழை­ய ­பல்­லவி என்­பது சாதா­ர­ண­மா­கவே விளங்­கி ­கொள்­ளக்­கூ­டிய விவ­கா­ர­மாகும். பேசி ­தீர்க்கும் அத்­தி­யா­ய­மென்­பது பண்டா – செல்வா ஒப்­பந்த காலந்தொட்டு அண்­மைய தேசிய அர­சாங்­கத்தின் இழுத்­த­டிப்­பு­கள் ­வரை ஏற்­பட்ட அனு­கூ­லங்கள் மூலமும் பிரதி கூலங்கள் மூலமும் புரிந்து கொள்­ள­ மு­டியும். பேசி ­தீர்க்கும் பொறி­மு­றையில் தமிழ் மக்கள் எந்­த­ளவு நம்­பிக்கை கொள்­வார்கள் அல்­லது நம்­பிக்­கை ­வைப்­பார்கள் என்­பதை காலம் தான் தீர்மா­னிக்க முடியும். அதிலும் மஹிந்த ராஜப­க் ஷவின் ஆட்­சிக் ­கா­லத்தில் சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டு முறை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களின் நிறை­வு ­பெ­று­மானம் எவ்­வாறு இருந்­தது என்­பது பதிந்து கொள்­ளப்­பட்ட விட­யங்கள். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மஹிந்த கால பேச்­சு­வார்த்தை தொடர்­பாக விடுத்து வந்த அறிக்­கைகள் எவ்­வ­ளவு உண்­மை­களை உணர்த்தும் என்­பது பற்றி விளக்­க­ வேண்­டிய தேவை­யில்லை.
எதிர்­கா­லத்தில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தங்­க­ளுடன் சேர்ந்து செயற்­ப­ட­ வேண்­டு­மென்­பது மஹிந்­தவின் எதிர்­பார்ப்­பாகும். தமி­ழ­ர­சு கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு அதன்­ பின்னே அது தமிழர் விடு­த­லை கூட்­ட­ணி­யாக பரி­ண­மித்து அதன் ­பின்பு தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பாக ஒன்று கூடிய காலம் ­வ­ரை­யுள்ள சுமார் 68 வருட வர­லாற்­றி­லும் ­சரி அல்­லது 15 மேற்­பட்ட பொதுத் ­தர்தல் காலத்­திலும் சரி தமிழ்த் ­தே­சி­யக் கூட்­ட­மைப்போ அல்­லது அதன் தோழ­மை ­கட்­சி­க­ளாக இருந்த கட்­சி­களின் தலை­மை­களோ ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி­யுடன் கைகோர்த்­து­கொண்ட வர­லாற்று சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை. அதற்கு காரணம் 1958 ஆம் ஆண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இன ­க­ல­வ­ரத்தின் பின்­ன­ணியில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியின் ஆட்சி இருந்­துள்­ளது என்­பது. மற்றும் பண்­டா­ர­நா­யக்­க­வினால் கொண்­டு­ வ­ரப்­பட்ட தனி ­சிங்­கள சட்டம் இன்னும் பண்டா செல்வா ஒப்­பந்தம் கிழித்­தெ­றி­யப்­பட்ட சம்­ப­வங்கள் தமிழ் கட்­சி­க­ளையோ அதன் தலை­மை­க­ளையோ ஒன்­று­சே­ர­ வி­ட­வில்­லை­யென்­பது பொது­வாக கூறப்­ப­டு­கின்ற கார­ணங்கள். அது­ மட்­டு­மன்றி 1972 ஆம் ஆண்டு திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கா­வினால் உரு­வாக்­கப்­பட்ட சுதந்­திர யாப்பில் தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான பல கெடு­பி­டிகள் கொண்­டு­ வ­ரப்­பட்­டது என்­பது தமிழ் மக்­களின் மனதில் பதிந்து போன கார­ணங்­க­ளாக இருந்­துள்­ளது.
ஐக்­கி­ய­ தே­சி­ய ­க­ட்­சியை ஆலிங்­கனம் செய்த ஒரு­ சில வர­லாற்று சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளது. உதா­ர­ண­மாக 1965 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசி­ய ­கட்­சி­யுடன் தமி­ழ­ர­சு ­கட்­சியும் தமிழ் காங்­கி­ரஸும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­பட்­ட­போதும் கோணேஷர் கோயில் புனி­த­நகர் தொடர்பில் ஐக்­கிய தேசி­ய ­கட்சி தலை­மைக்கும் தமி­ழ­ர­சு ­கட்­சிக்கும் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வியை ஏற்­றி­ருந்த திருச்­செல்வம் அமைச்சர் பத­வியை துறந்­தார்.
குறிப்­பிட்டு கூறு­வ­தானால் ஐக்­கிய தேசி­ய ­கட்­சி­யுடன் உடன்­பட்­டு ­போ­கிற பல சந்­தர்ப்­பங்கள் தமிழ் தரப்­பி­ன­ருக்கு உண்­டா­கி­ய ­போதும் அவை பல கார­ணங்­க­ளினால் தவிர்த்து கொள்­ளப்­பட்­ட­து ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சுதந்­தி­ரக் ­கட்­சி­யுடன் உடன்­பட்டு போகிற சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கு­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு நீண்ட வர­லாற்று ஓட்­டத்­துடன் உரு­வா­கி­யதே இன்­றைய தேசிய அர­சாங்­க­மாகும்.
வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு தேசி­ய ­கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் ­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்சி ஆகிய இரு­ கட்­சி­களும் கூட்டு சேரு­வ­தற்கு சந்­தர்ப்­பத்தை உரு­வாக்­கி ­கொ­டுத்த பெருமை சிறு­பான்மை கட்­சி­க­ளை ­சாரும். வடக்கு, கிழக்கு, தெற்கு தமிழ் முஸ்லிம் சிங்­களம் தென்­னி­லங்கை வட­கி­ழக்கு, மலை­யகம் என்ற வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் ஒன்று இணைந்­து­கொண்ட ஒரு தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது.
இது உரு­வா­கு­வ­தற்கு பல கார­ணங்கள் நதி மூல­மாக இருந்­த­போ­திலும் நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டி­போய் ­கா­ணப்­படும் தேசி­ய பி­ரச்சி­னைக்கு அர­சியல் ரீதி­யான தீர்வு காணப்­ப­ட ­வேண்­டு­மென்ற ஆழ­மான அத்­தி­வா­ரத்தில் உரு­வாக்­கப்­பட்­டதே தேசிய அர­சாங்­க­மா­ன­தாகும். 30 வருட கால யுத்தம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மாத்­தி­ர­மன்றி இன­வு­ற­வுகள், நல்­லி­ணக்கம், பிராந்­திய ஒற்­றுமை, மத கைங்­க­ரி­யங்கள் அனைத்­தி­லுமே பாத­க­மான நாசத்தை விளை­வித்த நிலை உண­ரப்­பட்டே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது.
இதன் பிர­தான குறி­க்கோ­ளாக காணப்­பட்ட விடயம் தேசி­ய பி­ரச்சி­னைக்கு அர­சியல் யாப்பு மயப்­பட்ட தீர்வை கொண்டுவரப்­ப­ட ­வேண்­டு­மென்ற தூர­நோக்கு மற்றும் ஆழ­மான அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். அந்த குறி­க்கோளின் அப்பாற்­பட்­டதே அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்­சி­யாகும். ஆனால் அந்த முயற்­சிக்கு தடை­யாக இருக்­கின்ற கார­ணிகள் அல்­லது சவால்கள் எவை­யென்­பது தளிவா­கவே உண­ரப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.
தேசிய அர­சாங்­கத்­துக்கு தலைமை தாங்­கு­கின்ற தலை­மைகள் மக்­க­ளுக்கு பயப்­ப­டு­கி­ன்ற­தை ­விட தம்­ எ­திரே நிற்கும் மாற்றுத்தலை­மை­க­ளுக்கு பயப்­ப­டு­வ­தன் ­கா­ர­ண­மா­கவே அர­சியல் யாப்பு சார்ந்த முயற்­சி­களில் அதிக அக்­கறை காட்­டாமல் இழுத்­த­டித்­து­ வ­ரு­கி­றார்கள்.
வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­ வேண்­டு­மென்ற உண்­மையை மஹிந்த தரப்­பினர் ஏற்­றுக்­கொண்­டி­ருப்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட­ வேண்டும். கடந்த 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஒப்­பீட்டு ரீதியில் வட­கி­ழக்கு அபி­வி­ருத்தி ஏனைய பிர­தே­சங்­க­ளை விட பாரிய பின்­ன­டைவு கொண்­ட­தாக காணப்­ப­டு­கி­றது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. தென்­னி­லங்­கை­யுடன் ஒப்­பி­டும் ­போது எல்­லா து­றை­யிலும் பாரிய பின்­னிலை கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது என்­பது பல­வி­த­மான கார­ணி­களால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.
வேலை­யில்­லாப் பி­ரச்சினை விவ­சா­யத் து­றையின் அபி­வி­ருத்தி குறைவு. தொழிற்­சா­லைகள் மற்றும் உற்­பத்­தி ­து­றையின் அதி­க­ரிப்பு இன்மை உல்­லா­ச ­ப­ய­ணத்­துறை கவ­னிக்­கப்­ப­டாமை நிர்­மா­ணத்து­றையின் வீழ்ச்சி போக்­கு­வ­ரத்­து­ து­றையின் வளர்ச்­சி­யின்மை என ஏகப்­பட்ட துறை­களில் வட­கி­ழக்கு பின்­ன­டை­வு­ கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது.
இது தொடர்பில் மாகா­ண ­அமைச்சர்களின் பொறுப்­பாண்மை கைய­ளிக்­கப்­ப­ட­வில்­லை ­எ­ன்­ப­தற்கு அப்பால் மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் நிதி­யொ­துக்­கங்­களில் காட்­டப்­ப­டு­கின்ற பாகு­பா­டு­ கா­ர­ண­மா­கவே அப்­பி­ர­தே­சங்கள் அபி­வி­ருத்தி அடை­ய­வில்­லை­யென்­பது பல சந்­தர்ப்­பங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­ வி­ட­யங்­க­ளாகும்.
வட­மா­காண முத­ல­மைச்சர் வடக்கின் அபி­வி­ருத்தி தொடர்­பில்­காட்­டப்­ப­டு­கின்ற ஓர­வஞ்­சக தன்­மை­ பற்றி பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சுட்­டிக்­காட்­டி­ வ­ரு­வது மாத்­தி­ர­மன்றி அர­சாங்­கத்­துடன் அடிக்­கடி முரண்­பட்­டு கொண்­டி­ருப்­ப­தை­யும் ­கேள்­வி­யு­று­கிறோம். வட­மா­கா­ணத்­துக்­கான முதல் அமைச்சர் நிதி­யொன்று ஸ்தாபிக்­கப்­ப­ட­வேண்டும் என விடுத்த கோரிக்­கைகள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது ஒரு­ பு­ற­மி­ருக்க வட­மா­காண அபி­வி­ருத்தி தொடர்பில் மாகா­ண­ ச­பை­யுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் மத்­திய அரசு செயற்­ப­டு­வது தொடர்­பாக பல அதி­ருப்­திகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
தமிழ் மக்­களின் பிரச்சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­ விட்டால் வட கிழக்கில் புதிய சக்­திகள் உரு­வாகும் சூழ்நிலை ஏற்­படும் என்ற ஒரு யதார்த்­தத்தை அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தன் பின் வட­கி­ழக்கு பிரச்சி­னைக்கு தீர்வு காணக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் பல­ மு­னை­க­ளிலும் இருந்தபோதிலும் அவை அனைத்­துமே திட்­ட­மிட்ட முறையில் தட்­டி ­க­ழிக்­கப்­பட்­டது. தமிழ் மக்­களின் நீண்­ட­கா­ல ­பி­ரச்சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு காணப்­ப­ட ­வேண்­டு­மென்ற அழுத்­தங்­களை இந்­தியா உட்­பட போருக்கு உத­விய அனைத்து நாடு­களும் அழுத்தம் கொடுத்­த­ போதும் முன்­னைய அர­சாங்கம் அதை பொ­ருட்­ப­டுத்­தாமல் ஏமாற்றும் கைங்­க­ரி­யங்­களை மேற்­கொண்­டதே தவிர இதய சுத்­தி­யுடன் செயற்­ப­ட­வில்லை. போருக்­கு ­பின்­னரான நிைல­மை­களில் ஐ. நா. உட்பட ராஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தீர்வை முன்­வைத்து நிரந்­த­ர­மான அமை­தி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் கொண்­டு­ வா­ருங்கள் என ஆலோ­சனை வழங்­கி­ய ­போதும் அந்த விட­யத்தில் அக்­கறை செலுத்­தாது போரை வெற்­றி­ கொண்ட கர்­வத்தில் மஹிந்த அர­சாங்கம் செயற்­பட்­டதே தவிர எவ்­வித ஆரோக்­கி­ய­மான முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்­லை­யென்­பது தமிழ் தரப்­பி­னரின் குற்­றச்­சாட்­டாக இருந்­துள்­ளது. அத்­த­கைய ஒரு­வர் தான் தற்­போது பிரச்சினை தீர்க்­கப்­ப­டா­ விட்டால் வடகிழக்கில் புதிய சக்தி உரு­வாக வாய்ப்­பி­ருக்கி­ற­தென்று கூறி­யுள்ளார்.
வடக்கு, கிழக்­கை பொ­றுத்­த­வரை பிரதமர் கூறினாலும் சரி கூறா விட்டாலும் சரி கொழும்பு ராஜ்ஜியத்தின் காலனித்துவ பிரிவாகவே பார்க்கப்ப டுகிறதென்பது ஒரு கசப்பான உண்மை.
மாற்றங்களும் மாறுதல்களும் பாய்ச்சல்களும் இயற்கையின் நியதி. அந்த வகையில் முன்னாள் ஜனா திபதி தமிழர்கள் விடயத்தில் தன்னை தற்பொழுது சுதாகரித்து கொண்டிருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதானால் மனமாற்றங்களுக்கு உட்பட்டிருக்கலாம். இது மனமாற்றங்கள் என்பதை விட நாட்டின் எதிர்கால நன்மை கருதி மாற்றங்களுக்கு ஆளாக வேண்டிய தேவை எல்லா தரப்பிற்கும் உண்டு என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ கோத்தபாய ராஜ
பக் ஷ சார்பான மனப்பதிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு விளக்கம் தேவையில்லை. சந்திரிகா அம்மையாரின் கருத்தை உரைத்து பார்க்கக் கூடிய இலங்கையர் ஒவ்வொருவரும் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் ஒரு பிரச்சினை தங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்தி கொள்வதற்கானதாகவே காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதி யில் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய அடை யாளங்களை உறுதிப்படுத்தி கொள்வதற்கும் அதற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் பல வருடங்களாக போராடி வருகிறார்கள் அதை தொடர்ந்து புறக்கணிப்போமாயின் நாடு நல்லிணக் கத்தை அடைய முடியாது என பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் த ன் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பில் முன்னாள் ஜனாதிப தியான மஹிந்தவும் பாதுகாப்பு செயலரும் உரை யாடியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்களின் எண்ண அலைகள் புதிய கருத்துக்களை கொண்டதாகவே காணப்படுகிறது.குறிப்பிட்டு கூறுவதானால் தேசிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் விசுவாசம் எல்லாம் கரைந்து போய் அவநம்பிக்கைகளும் விரக்திகளுமே எஞ்சி நிற்கின்றது. இந்த அரசாங்க காலத்தில் தீர்வை அடைந்து விடலாம் நல்லிணக்கம் உண்டாகி விடும் என்ற எதிர்பார்ப்புகளும், நம்பிக் கைகளும் குலைந்து போன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். எவ்வாறு பிரேமதாஸவுக்கு பயந்தாரோ சந்திரிகா அம்மையார் ரணிலுக்கு பயந்தாரோ அதேபோன்றே இன்றைய அரசு எதிர ணியினருக்கு பயந்து கொண்டிருக்கும் சூழலை மஹிந்த அணியினர் பயன்படுத்த பார்க்கின்றார் கள் என்பதை மேற்படி உரையாடல் சுட்டிக்காட்டு கிறது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies