முன்னாள் போராளிகளை புறந்தள்ளுவது மனிதாபிமானமற்றது! - முதலமைச்சர்

18 Jun,2018
 

ஆனந்தசுதாகரை விடுவிக்க முடியாது! - விக்கியிடம் கைவிரித்தார் ஜனாதிபதி

ஆனந்த சுதாகரைப் போன்ற மேலும் பல கைதிகள் இருப்பதனால், அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
  
நேற்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்த போது ஆயுள் தண்டனை கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆனந்த சுதாகரை போன்ற மேலும் பல கைதிகள் சிறைகளில் இருக்கின்றனர். இவரை விடுவிக்கும் போது மற்றையவர்களும் தங்களை விடுவிக்குமாறு கோர கூடும் என்பதனால் இவரை உடனடியாக விடுவிக்க முடியாதுள்ளதாக முதலமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஜனாதிபதிக்கு கோரிக்கையொன்றை விடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்தப் பிள்ளைகளுக்கு தமது தந்தையை பார்வையிடக் கூடியவாறு அவரை அருகிலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு மாற்ற நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைச் செய்வதற்கு நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
 

போரில் பாதிக்கப்பட்டு பலவித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பமாட்டாது என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
  
நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதியின் முன்னிலையில் உரையாற்றும் போதே வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'அமைச்சர் சுவாமிநாதனின் இது குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் மிகவும் மன வருத்தம் அடைந்தோம். எமது மக்கள் பல்வேறு விதமான துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உட்பட்ட நிலையில் துன்பங்களை இதயத்தில் சுமந்தவாறு நடைப் பிணங்களாக நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.



Share this:

NEAR REJSE. DK

Tamilmatrimony.world

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies