தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம்

27 Mar,2014
 

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம்!!


Santosh-Sivan-Lingusamyதமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம் – மலையாளி தெலுங்கர் கூட்டணியின் திட்டமிட்ட சதி நடவடிக்கை!

மலையாள ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இனம் திரைப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இவர் தெலுங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் இனம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனஅழிப்பை அறிந்து இன்று உலகமே சிங்களதேசத்தையும் அதன் அரசையும் காறி உமிழ்கின்ற நிலையில் சந்தோஸ் சிவன் , லிங்குசாமி (மலையாளி தெலுஙகர் ) கூட்டணியினர் தமிழ் மக்களின் போராட்டத்தை தவறாக சித்தரித்து சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படமெடுத்து பணம் சம்பாதிக்கும் இவர்கள் சிங்கள அரசுக்கு துணைபோவதன் நோக்கம் தான் என்ன?

ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் ஒரு மலையாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர். மல்லி ,. ரெரரிஸ்ட் என இரன்டு படங்களை
 இயக்கியிருந்தார். மல்லி என்ற திரைப்படத்தில் தமிழ் பெண்களை படுமோசமாக சித்தரித்திருந்தார்.

ஒழுக்கக் கேடான முறையில் கர்ப்பமுற்ற தமிழ் பெண் மனிதவெடிகுண்டாக மாறுவதாக அந்தப் படத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சந்தோஸ் சிவனால் எடுக்கப்பட்டுள்ள இனம் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஈழத்தமிழர்களின்
 வாழ்வியலும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதுடன, தமிழின அழிப்புப்பற்றியோ அல்லது சிங்கள படைகளின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

விடுதலைப் புலிகள் 12 வயது பாலகர்களை கூட வலிந்து படையில் இணைப்பதாகவும் இதனால் வளர்ப்புத்தாயான (சரிதா) 12 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் கதை அளந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்காக செஞ்சோலை . அறிவுச் சோலையென இளம் தலைமுறையின் நல்வாழ்விற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அறப்பணிகள் இவர்களின் கண்ணில் படாமல் விட்டதன் மாயமென்ன.

அதே செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் சிங்களப்படை குண்டுவீசி 60 குழந்தைகளை கொன்றுகுவித்ததை இனம் படத்தில் சந்தோஸ் சிவனும், லிங்குசாமியும் குறிப்பிடாமல் விட்டது ஏன்?

இதே படத்தில் இன்னொரு காட்சியில் சிங்களப் படையினன் களத்தில் இறந்து கிடக்கின்றான. அவனது கையில் அவனின் குழந்தையின் ஒளிப்படம் இருக்கிறது. அந்தக்காட்சியை மிகவும் உருக்கமான பின்னணி இசையோடும் பரிவோடும் காட்சிப்படுத்தியுள்ள சந்தோஸ் சிவன் , பாலச்சந்திரன் போன்ற ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட நிஐத்தை ஏன் சொல்ல
 மறந்தார்.

போரில் இருந்து தப்பிவரும் குழந்தைகளை அரவணைப்பவர்களாக, அவர்களுக்கு பரிவுகாட்டுபவர்களாக சிங்கள புத்த பிக்குகளை சித்தரித்துள்ள சந்தோஸ் சிவன் லிங்குசாமி ( மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர். சிங்களபேரினவாத பிக்குகளால் தமிழ் மக்கள்
 கொல்லப்பட்டதையும் தமிழ் பெண்கள் சிறுமிகள் இன்றுவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதையும் மறைக்க முனைவது ஏன்?

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணொருவர் (கதை நாயகி) ஆற்று நீரில் தனது கறைகளை கழுவிச் செல்வதாக மிகவும் மோசமான அருவருப்பான காட்சியும் இன்னும் பல இழிவான காட்சிகளும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன..

சிங்கள அரசின் இனப்படுகொலையால் பெரும் அழிவுகளை சந்தித்தபடி நிர்க்கதியான நிலையில் சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கும் தமிழ்இனத்தையும் அவர்களின் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சந்தோஸ் சிவன் , லிங்குசாமி (மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர் இந்தப்படத்தை எடுத்துள்ளனர்.

சிங்கள அரசின் படுகொலைகளையும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் மறைத்து சிங்கள அரசையும் படைகளையும் உத்தமர்களாக காட்டியுள்ளனர் இவர்கள். மகிந்த ராயபக்சவின் விசுவாசிகள் போன்று செயற்படுகின்றனர்.

தமிழ் திரையுலகம் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதாரவாக எத்தனையோ அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தனையோ திரைத்துறையினர் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் திரைத் துறை மூலம் பெயர் பெற்று தமிழ் மக்கள் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்து இறுதியில் தமிழ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின்
 வாழ்வியலையும் இழிவு படுத்தும் மலையாள ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் , இயக்குனரும்தயாரிப்பாளருமான தெலுங்கர் லிங்கு சாமி ஆகியோருக்கு பதில் சொல்ல தமிழ் மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இனம் திரைப்படத்தை புறக்கணிப்பதோடு இந்த கூட்டணியினரால் உருவாக்கப்படவுள்ள ஏனைய திரைப்படங்கள் அனைத்தையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கவேண்டும்.

-தமிழின உணர்வாளர்கள்-

ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம்.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார். (எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது).

அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுகிறாள். அவள் பார்வையில் கடந்த காலம் விரிகிறது. அவள் கதையை கேட்டு இறக்கம் கொள்ளும் அதிகாரி அவளை விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

இலங்கை அகதியை சுதந்திரமாக விடும் அதிகாரி உள்ளானா? அது சாத்தியமா? அந்த இந்திய அதிகாரியின் முகத்தை திரையில் காண்பிக்கவே இல்லை (அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பில்லை என குறிப்பால் உணர்த்துகிறாரோ?)

நிச்சயமாக என்னால் சொல்ல முடியும், இது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய, அனுப்ப போகும் படமாக இருக்க முடியாது. நம் கண் முன் வைத்திருப்பதே edited versionஆக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்காங்கே இசை மற்றும் படத்தொகுப்பில்
jumping தெரிகிறது. இவை ராஜபக்ஷ குழுக்களின் நவீன பிரச்சார உக்தி. ஆனால் ஒரு பாமர திரை ரசிகனால் இவை எதையும்
 நினைத்துப்பார்க்காமல், நமக்கான படமாகவே நினைக்க வாய்ப்புள்ளது, அதனுள் பொதிந்திருக்கும் அரசியல் மிக ஆபத்தானது.

ஒட்டு மொத்த கதையே ஆட்சேபத்திற்குறியதுதான். அதில் ந்மக்கு நான்கைந்து இடங்களில் சற்றும் உடன்பாடில்லை.

தலைப்பு ஆரம்பிக்கும் போதே அவன் சூழ்ச்சிகளை ஆரம்பிக்கிறான். டைட்டிலில் வரைந்த ஓவியங்களை காண்பிக்கிறான். அதில் ஒரு
 ஓவியத்தில் சீஷா விளையாட்டில் விளையாடுவது போல், இருவர் நேருக்கு நேர் அமர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியை
 நீட்டியபடி இருக்கின்றனர். இது உண்மையிலேயே அப்படி நடந்த சண்டையா? சிங்களவன் நேருக்கு நேர் தான் நம்முடன் மோதினானா?
 (உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், ஒருவனுக்கு எதிரே ஒன்பது பேர் நிற்பதைப் போல் தான் வரைந்திருப்பான்)

முதல் கால் மணி நேரத்தில், நான்கைந்து இடங்களில் இனக்கலவரம், இனக்கலவரம் என்ற வார்த்தை திரும்ப திரும்ப பிரயோகிப்பதின் நோக்கமென்ன?

(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், இனப்படுகொலை எனவே நிறுவியிருப்பான்)

போராளியாக சித்தரிக்கப்பட்ட ஒருத்தரும், பதின் பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவன், சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

சிங்கள ராணுவ அடியாள் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவனது கையில் குழந்தையின் புகைப்படம் இருக்கிறது. இந்த காட்சியின் மூலம் பாசத்தை தான் இயக்குனர் காட்ட முற்பட்டாரானால், அந்த புகைப்ப்டம் ஏன் போராளியின் கைகளில் இருந்திருக்ககூடாது. அதை விட இது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியுமே?

(இத்திரைப்படத்தை இவன் சிறீலங்காவிலா வெளியிடப்போடிறான், தமிழ் நாட்டில்தானே?)

கருணாஸ் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே பெண் போராளிகள் வருகிறார்கள். அக்குழந்தைகளுக்கு போர்க்காட்சிகளை கானொளியில் போட்டு காண்பிக்கின்றனர்.

கருணாஸின் முகம் பல கோணகளில் நெளிகிறது. (மக்களுக்கு விருப்பமில்லாததை போராளிகள் செய்கிறார்களாம்)

ஒரு தமிழ் சிறுவன் கூறுகிறான். “நான் கடைசிகட்ட போரில் அங்கே தான் இருந்தேன். லீடர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன். அவர் கழுத்து அறுபட்டு கிடந்தது.” (இந்த வசனமும், மேலே கூறிய கருணாஸின் காட்சியும் திரைக்கதையில் ஒரு மயிரிழையளவும் தேவைப்பட்டதாக தெரியவில்லை, மற்றவை தேவையா என கேட்காதீர்கள்)

உச்சமாக அனுமதிக்கவே முடியாத காட்சி, போர் எல்லாம் முடிந்து, எல்லோரும் காட்டு வழியே பயணிக்கிறார்கள், வெளி நாடு செல்ல. அங்கே சிங்கள ராணுவத்தினர் அவர்களை பார்க்கிறார்கள்.

(அதாவது மே 19 வாக்கில், அந்த மூன்று நாட்களில் அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். இந்த சந்தொஷ் சிவனிற்கு மட்டும் எப்படி தெரியாமல் போனதோ?) தமிழ பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார்.

(மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்).

அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள். (இங்கே தான் வாங்கிய எச்சில் பணத்திற்க்கு, அவன் மிகுந்த விசுவாசமாய் காட்சியை வைக்கிறான்) அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புற படுத்துகிறான். போராளி துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது.(அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்) (சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்)

கதையில் வரும் எந்த கதாபாத்திரமும், ஈழத்தின் சூழல் தெரிந்து வாழ்பவர்களாக தெரியவில்லை. கதை நடைபெறும் காலம் போர்(இனப்படுகொலை) நடைபெறும் காலம். அதன் பிரதிபலிப்பு எந்தகதாபாத்திரத்தின் செயலிலும், பேச்சிலும் தெரியவில்லை. காலம் செல்ல செல்ல அவரவர் வாழ்விடங்களை விட்டு, குறுகிய பகுதிக்குள் சுருங்கினார்கள். அப்படி ஒரு விடயமே படத்தில் இல்லை. மாறாக அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதில் 7 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். 15 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். அச்சிறுமி வெட்ட வெளியில் சிறுவர்களுக்கு மத்தியில் குளிக்கிறாள். மூளை வளர்ச்சியில்லாத ஒருவனும் கடைசிவரை முத்தம் கேட்டுக்கொண்டே அலைகிறான். (போர்ச்சூழலில் இருக்கும் குழந்தைகள் உயிரை காக்க போராடுமா அல்லது இன்ப விளையாட்டுகளில் திளைக்குமா)

படத்தில் எல்லாருமே ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டு, ஒருவன் மட்டுமே மகாத்மாவாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் சிங்கள ராணுவ கேப்டன். கடைசியில் போரில் உயிர் இழநத 40000 பேருக்கும், அடிபட்ட ஆயிரக்கணக்கான பேருக்கும் இப்படம் சமர்ப்பணம் என முடிகிறது.

(டேய் நாயே இது போரா? இல்ல இனப்படுகொலையா? செத்தவன் 40000 பேருன்னு உனக்கு யாருடா சொன்னது? ன்னு கேக்க தோனுது, யாருகிட்ட கேக்கலாம்?) சந்தோஷ் சிவனா? லிங்குசாமியா?



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies