இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது 321 பேருக்கு கொரோனா

17 Jan,2021
 

 
 
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த  சங்கம் தெரிவித்துள்ளது.
 
நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளது. இப்போது நாட்டில் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றால் நாட்டில் வைரஸ் பரவல் அதிகம் என்பதே அதன் அர்த்தமாகும்.
 
இது சமூக தொற்றா அல்லது கொத்தணிகளா என்பது விவாதமல்ல. வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகும்.
 
பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் இப்போது பரவும் வைரஸ் வழமையாக இதுவரை காலமாக இலங்கையில் காணப்பட்ட வைரஸ் அல்லாது பிரித்தானியாவில் காணப்படும் வைரஸுக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
 
எனவே அரசாங்கம் இப்போது எடுக்கும் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. இப்போது நாம் தவறிழைப்பது மீண்டும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்” எனவும் அவர் கூறினார்.
 
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
 
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52ஆயிரத்து 634ஆக அதிகரித்துள்ளது.
 
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன்படி, இதுவரையில் பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், தொற்று உறுதியானவர்களில் ஏழாயிரத்து 207 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அத்தோடு, இலங்கையில் இதுவரை 256 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies