இரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!மாணவன் ஒருவர் பலி

09 Dec,2018
 

 
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(09) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது
இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஞாயிற்றுக் கிழமை ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர் அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்
இதன் போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும், ஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என்றும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்!
 
கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.
இன்று(09) மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்தது. இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர். இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக்கொடிண்டிருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் அவருடன் வருகை தந்த நண்பர்கள் அழுதவாறு காணப்பட சம்பவ இடத்தில் நின்ற ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி பிரதி பொலீஸ் மா அதிபர், கிளிநொச்சி படைகளின் தலைமையகம், போன்றோருக்கு உடனடியாக அறிவித்த போதும் முப்பது நிமிடங்களுக்கு பின்னரே பொலீஸ் மற்றும் படையினர் வருகை தந்தனர்.
இதற்கிடையில் ஒரு பகுதியில் திறக்கப்பட்டிருந்த வான்கதவுகள் மூடப்பட்டு சில இளைஞர்கள் நீரில் இறங்கி தேடுதலை மேற்கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் உடலை மீட்டனர்.
இரணைமடுகுளம் அபிவிருத்திக்கு பின் கடந்த வெள்ளிகிழமை ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies