இலங்கைச் செய்தித் துளிகள் திங்கட்கிழமை, 02 டிசெம்பர் 2013

02 Dec,2013
 






வட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 350 பேருக்கு இன்று அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நியமனம் வழங்கும் வைபவத்திற்கு, வட மாகாண சபை முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள் உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கிறது.

மத்திய அரசால் வட மாகாண சபைக்கு இணைக்கப்பட்ட 120 பட்டதாரி களுக்கு நிரந்தர நியமனங்களும், வட மாகாண சபையில் கடமையாற்றும் வகையில் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 230 பேரும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவும் உள்ளனர்.

வட மாகாண சபை செயற்பட தொடங்கப்பட்ட பின்னர் மாகாண சபையின் ஊடாக அரச துறைக்கான முதற் தடவையாக நியமனங்கள் வழங்கப்படுவது இதுவாகும்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கான நியமனங்கள் தேர்தலை கருத்திற் கொண்டு இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நியமனங்களை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் மூன்று நெறிப்படுத்தலுக்கு பின்னர் தமக்குரிய அமைச்சுடன் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்கான முன்மொழி பயிற்சிகளும் தகவல் தொழில் நுட்ப பயிற்சிகளும் மாவட்டங்களிலுள்ள பயிற்சி நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


ஐநா விசேட பிரதிநிதி இன்று இலங்கை வருகை! நாளை வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்கிறார்!






ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் வடக்கிற்கு பயணம் செய்வதுடன், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை வரும் சலோகா பெயானி நாளை செவ்வாய்கிழமை யாழ். வலிகாமம் வடக்கு, கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்குச் செல்வாரென நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளதெனவும் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

அங்கு செல்லும் அவர், நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

அதன்பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரனையும் அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.

புதன்கிழமையன்று இறுதிக்கட்ட மோதல் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகம் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மார்க் ஆகியோருடனும் பேச்சு நடத்துவார்.

மேலும் இவர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியையும் சந்தித்து கலந்துரையாடலாமெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.




பண்டாரநாயக்க மண்டப தீப்பரவலில் 200 கண்டுபிடிப்புகள் நாசம்!




பொதுநலவாய நாடுகளின் அமர்வின் போது ஊடக நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தற்காலிக கட்டிடம் நேற்று முன்தினம் எரியுண்ட போது சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகியுள்ளன.

சுற்றாடல்துறை அமைச்சினால் புதிய கண்டுப்பிடிப்பாளர்களின் கண்காட்சி ஒன்று இந்த கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான பெற்றோலில் இயங்கும் அடுப்பு ஒன்றை இயக்கியபோது தீ ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகின.

குறித்த கட்டிடம் வெறும் பிளாஸ்டிக்கினால் அமைக்கப்பட்டிருந்தமை காரணமாக தீ விரைவாக பரவி முழுமையாக கட்டிடத்தையும் அழித்தது.

இதன்பின்னரே தீயணைப்பு படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த மண்டபம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்களில் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கனடியப் பிரதமரிடம் இலங்கை சார்ந்த அரசியற் தாக்கத்தை ஏற்படுத்திய கனடிய மனிதவுரிமை மையத்தின் ஒன்றுகூடல்







கனடிய அரசின் மாற்றங்களின் தாக்கமான பங்கை வகித்து வரும் கனடிய மனிதவுரிமை மையத்தின் அரசியல் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் இடம்பெற ஏற்பாடகியுள்ளது.

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் இடம்பெறும் போது இலங்கைக்குச் செல்வதா இல்லையா என்பது தொடர்பான கனடியத் தமிழர்களின் கருத்துக்களை கனடியப் பிரதமர் அறிய முயன்ற போது, லங்காசிறி செய்திக் குழுமத்தின் உதவியுடன் அதற்கான வாக்கெடுப்பு மூலம் அவர்களின் முடிவை அறிந்து கனடியப் பிரதமரிற்கு வழங்கியதன் மூலம்,

அந்த மாநாட்டிற்குக் கனடியப் பிரதமர் செல்வதில்லையென்ற தீர்மானத்தை எய்துவதற்கு ஏதுவாகச் செயலாற்றிய கனடிய மனிதவுரிமை மையம், கனடாவின் சார்பில் இலங்கை சென்ற வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலர் தீபக் ஒபராய் உள்ளிட்ட குழுவினருடன் ரொறன்ரோவில் முக்கிய ஆலோசனைகளை அக்குழு இலங்கைக்குப் புறப்படும் தினத்தன்று நடத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை எட்டுமுகமாக தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக கனடியத் தமிழர்களிற்கும் அரசியலாளர்களுக்குமான பாலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ரொறன்ரோவில் இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் பங்குபற்ற விரும்பும் கனடாவிலுள்ள தமிழர்கள் கனடிய மனிதவுரிமை மையத்தை 416.276.2146 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு அல்லது என்ற sujan@chrv.ca மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.





பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் ஸ்கைப் தொழில்நுட்பம்





2010 இல் தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை குரம் ஷேக்கின் விசாரணையின் போது ஸ்கைப் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், நீதிமன்றம் கோருமானால் ஏனைய நவீன தொழில்நுட்பங்களையும் குறித்த வழக்கு விசாரணையின் போது ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது அமைச்சு நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் ஒலிப்பதிவு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானியா பிரஜையுடன் இருந்த ரஷ்ய பெண்ணை வீடியோ தொலைபேசி மூலம் சாட்சியமளிக்க வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் ஆலோசித்து வருவதாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நீதிமன்ற கூண்டுக்குள் இருந்து தரப்படும் சாட்சிக்கும் ஸ்கைப் மூலம் பெறப்படும் சாட்சிக்கும் இடையில் சூழ்நிலைக்காரணமாக முரண்பாடுகள் ஏற்படலாம் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் சிதம்பரத்தின் கூற்றை நிராகரித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை!




இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் சென்னையில் கூட்டிய மாநாடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியாவின் பங்கு என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த மாநாடு சிதம்பரம் தனிப்பட்ட ரீதியில் ஏற்பாடு செய்த மாநாடாக அமைந்திருந்தது.

இந்த மாநாட்டில் தமிழக காங்க்pரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர்கள்யூயூ இலங்கை தமிழர்கள் தொடர்பில் உரிய தெளிவாக்கலை தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை என்று பா சிதம்பரம் இந்த மாநாட்டின் போது குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை மறுத்துள்ள ஞானதேசிகன், இவ்வாறான 7 மாநாடுகளை தாம் நடத்தியுள்ளதாகவும் அதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காங்கிரஸின் தலைமை இன்னமும் தமிழ் நாட்டுக்கென்று மாவட்ட அலுவலக தலைமைகளை நியமிக்காமை இவ்வாறான கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு வாய்ப்பை தரவில்லை என்றும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.

அத்துடன் குலாம் நபி ஆசாத்துக்கு பதிலாக தமிழக காங்கிரஸ் செயலாளர் ஒருவர் பதவியேற்காமையும் தமிழக காங்கிரஸ் தரப்பில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.



போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் பிரஜை நாடு கடத்தல்





பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கொகெய்ன் ரக போதைப் பொருட்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாரியளவில் கொகெய்ன் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தியுள்ளார்.

சில்வான் லுபிலீஸ் என்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை உள்ளிட்ட நான்கு பேரை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.



போர் ஏற்படுவதற்கு திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஓர் முக்கிய காரணியாகும்: ரிக்கிரி கொப்பேகடுவ





போர் ஏற்படுவதற்கு திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஓர் முக்கிய காரணி என மத்திய மாகாண ஆளுனர் ரிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

திறந்த பொருளாதாரம் காரணமாக வடக்கின் விவசாயம் வீழ்ச்சியடைந்தது.

1982ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட எனது சிறிய தந்தை ஹெக்டர் கொப்பேகடுவவிற்கு வடக்கு மக்கள் ஆதரவளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த போது மரக்கறி வகைகளினால் மாலை செய்து அணிவித்தனர்.

அந்தக் காலப்பகுதியில் வடக்கு மக்கள் விவசாயத்தில் தன்னிறைவு நிலைமையை எட்டியிருந்தனர்.

திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகம் செய்ததன் பின்னர் வடக்கு மக்களின் விவசாய நடவக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலைமை நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்குக் கூட காரணமாக அமைந்தது.

அந்த இருண்ட யுகம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமாதானத்தை உரிய முறையில் பயன்படுத்தி வடக்கின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென ரிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.



செங்கல்பட்டு முகாமில் கைது செய்யப்பட்ட 7 அகதிகள் விளக்கமறியலில்..!




மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயாராக இருந்த நிலையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை தமிழ் அகதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு விசேட தடுப்பு முகாமில் இவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இவர்களை கைது செய்ய முயற்சித்த போது பொலிஸார் மீது முகாமில் இருந்த மேலும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே 7 போர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டு முகாமில்

தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



மட்டக்களப்பில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் அதிகரிப்பு





மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் எயிட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடுசெய்த மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி மட்டக்களப்பு நகரின் ஊடாக வெள்ளப்பாலம் பஸ்நிலையம் வரை சென்று திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியூடாக இலங்கை போக்குவரத்துசபை நிலையம் வரை சென்று மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண் சாரணிய கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி டிலாந்தினி மோகனகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெண் சாரணிய மாணவர்கள், லியோ கழக உறுப்பினர்கள், தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு நினைவுச் சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஊர்வலத்தில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அதன் தடுக்கும் வழிமுறைகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு வாகனங்களும் பேரணியாக சென்றன. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies