தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக வாக்குறுதியளிக்கவில்லை!- ரணில் விக்ரமசிங்க

28 Oct,2013
 




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் விலகுவதாக மகா சங்கத்தினரிடம் வாக்குறுதியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த 15ம் திகதி தம்முடனான கலந்துரையாடலில் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அலோசகர் கிராம்பே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள் அறிவித்தனர்.

ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே தேரர்கள் இந்த விடயத்தை தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அத்தகைய உறுதிமொழியொன்றை தாம் வழங்கவில்லை என குறித்த பத்திகைக்கு வழங்கிய நேர்காணலில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்க தமது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டுமொரு தடவை மகாசங்கத்தினரை ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தம்மால் செயற்குழுவின் ஐந்து பதவிகளை மாத்திரமே நியமிக்க முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறித்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய தவிசாளருக்கு வழங்கப்பட்ட போதிலும் அது செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே செயற்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலைமைத்துவத்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த கால அவகாசம் நிறைவு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



திருமணம் முடித்து நான்காவது நாளில் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி காயம் ஏற்படுத்திய கணவரை களுத்துறை தெற்கு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 22ம் திகதி திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னர் நான்கு நாள் கழிந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து கணவர், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சந்தேக நபரான கணவர் அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மனைவி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

வெடி மருந்துடன் இரு சகோதரர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை தம்வசம் வைத்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களை பலாங்கொட பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 25 கிலோ கிராம் வெடி மருந்தும் ஆயிரத்து 200 கிலோ கிராம் ஆமோனியமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொட மொலபுரே ரஜவக்க பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

இவர்கள் கருங்கல் உடைக்கும் குவாரி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதற்கான அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்ட பிறகும் தம்மிடம் இருந்த வெடி மருந்துகளை மீள கையளிக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொள்கை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

குருணாகல் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் நடந்த பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் இப்பாகமுவ பாண்கொல்ல இராணுவ முகாமில் கடமையாற்றி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் பயன்டுத்தக் கூடிய துப்பாக்கி, நவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வாரியபொல பிரதேசத்தில் பழங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கட்டுபொத்த என்ற இடத்தில் பொலிஸார் நேற்று சோதனை சாவடியை அமைத்து வாகனங்களை பரிசோதித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அதனை பின் தொடர்ந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து நடத்திய விசாரணைகளின் பின்னர் ஏனையோர் கைது செய்யப்பட்டதாக கட்டுபொத்த பொலிஸார் கூறினர்.




கோத்தாவிற்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி - முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு!




வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில்,

 பிரதம விருந்தினராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்களான சுகிர்தன், அனந்தி சசிதரன், கஜதீபன், சித்தார்த்தன், அரியரட்ணம், ஆர்னோல்ட், பசுபதிப்பிள்ளை ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



நிகழ்வில் வடக்கு மாகாண சபைக்குரித்தான அதிகாரங்கள், அவற்றில் ஆளுநரின் தலையீடுகள், போன்றன குறித்து முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் ஆளுநரை மாற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு தெரியப்படுத்தவில்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளித்த முதலமைச்சர்,

அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது எனவும், மக்களுடைய ஆணையை மதித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கோத்தாவிற்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி

வடமாகாணதின் ஆளுனரை நியமிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேட்ட பின்னரா நியமித்தீர்கள்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க வேண்டிய தேவையில்லை என வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று காலை நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுனருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது ஜனாதிபதியின் தற்துணிவின் பெயரில் ஆளுனர் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆளுனரின் தீர்மானங்கள் அரசியல் சார்பானதாக அமைகிறது.

ஆளுனரின் இவ்வாறான அதிகாரங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் தீர்மானங்களை ஊதாசீனம் செய்யக்கூடியதாக அமைந்துள்ளது தனிப்பட்ட ரீதியில் ஆளுனருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை ஆதனால் தான் நான் அவருடன் சிரித்துப் பழகி வருகின்றேன்.

அவருடைய பின்னணி என்ன ஆணைகொடுத்துப் பழக்கப்பட்ட இராணுவப் பின்னணி அதனால் இங்கு அவர் ஆளுனராக இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும், பிரச்சனைகளையும் எண்ணங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை அவரிடம் இல்லை.

இத்தகைய செயற்பாட்டினால் தான் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அளுனராக நியமிக்கவேண்டும் என்று மிக ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றேன் என்றார்.

ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் வடமாகாணத்தின் முதலமைச்சர் கூட்டங்களில் ஆளுனரை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றார் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய ஒரு கோரிக்கை எதனையும் இது வரை விடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நான் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன் வடமாகாணதின் ஆளுனரை நியமிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேட்ட பின்னரா நியமித்தீர்கள்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க வேண்டிய தேவையில்லை தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற ஒருவர் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக நியமிக்கவேண்டும் என்று கூறிவருகின்றார் என்பதை அவரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.




கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்! இன்று அதிகாலையில் சம்பவம்




கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில்  திருமுறிகண்டி பகுதியில் ஒருவர் எதிர்பாராதவிதமாக மோதுண்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருமுறிகண்டி பொன்னகரைச் சேர்ந்த அன்னமுத்து கணேஸ் (வயது 65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



வடக்கில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: ஈ. சரவணபவன் எம்.பி




மாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு வடக்கில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் தமக்கு இருக்கும் வளங்களைக் கொண்டு தம்மால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர்.

எனினும் திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சில காரணங்களினால் சரியானதொரு புரிந்துணர்வு இல்லாது இருந்தது.

இருப்பினும் தற்போது அந்தநிலை மாறியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகள் இருக்கக் கூடாது. வடக்கு மாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் எவ்வாறு அதிகாரிகள் செயற்பட்டார்களோ அதுபோலவே தற்போதும் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

எனவே அந்த நிலைமை மாறவேண்டும். மேலும் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பிலும் பல குறைபாடுகள் காணப்படுவதுடன் வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒருவர் மாத்திரமே செல்லக் கூடியதாக உள்ளது.

இதனால் பெண் அதிகாரிகள் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இது குறித்து நாடாளுமன்றில் பேசியுள்ளேன். எனவே உரிய முறையில் வகனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை யாழ்.மாவட்டத்திற்கு என இன்னமும் பிரதேச சபைகள் மற்றும் நகரசபைகள் உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே அதனைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் அவற்றை முன்வைக்கவுள்ளேன்.

மேலும் வடக்கில் சுற்றுலா மையங்கள் பல உள்ளன. அவற்றினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபனுடனும் பேசியுள்ளேன்.

எனவே மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை கொண்டு எதிர்காலத்தில் வருமானம் ஈட்டக் கூடியவகையில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் முதலமைச்சருடன் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.



தெற்கில் தமிழர்கள் வாழ முடியாத சூழ்நிலையை விக்னேஸ்வரன் உருவாக்குகிறார்: தேசப்பற்றுள்ள இயக்கம்



வடக்கில் சிங்கள மக்களை குடியமர்த்த இடமளிக்கப் போவதில்லையென்ற விக்கினேஸ்வரனின் இனவாதக் கருத்தானது கொழும்பிலும் தெற்கிலும் தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கும் இடமளிக்கப்படமாட்டாதென்ற பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
விக்கினேஸ்வரன் இக் கருத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும் இது தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பதையும் கண்டித்து அவ்வியக்கம் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் நிறைவேற்று குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற வழமையான கோரிக்கையை மீறியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலாவது கன்னி அமர்வில் உச்சக்கட்டமாக தமிழ் இனவாத நஞ்சை கக்கியுள்ளார்.

அதுதான் வட மாகாணத்தில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ குடியமர்த்தவோ இடமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் கொழும்பிலும், தென்பகுதியிலும் தமிழ் மக்களை குடியேற்ற இடமளிக்கப் போவதில்லையென்ற எதிர்ப்பு இங்கு உருவாகும். அதற்கான பொறுப்பை விக்னேஸ்வரனே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் இனவாதிகளைப் போன்று சிங்கள இனவாதக் கும்பல்களும் இயங்குகின்றன.

எனவே விக்னேஸ்வரனின் கருத்தை மையமாக வைத்து தமிழர்களுக்கு எதிராக இனவாத மோதலை கொழும்பில் ஏற்படுத்தினால் என்ன நடக்கும்? அவ்வாறானதொரு நிலைமை உருவானால் அதற்கான முழுப்பொறுப்பையும் விக்னேஸ்வரனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்களை குடியேற்ற இடமளிக்க முடியாது என எப்படி கூற முடியும். தற்போது நாவற்குழியில் தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதில் வீடுகளை கேட்டு விண்ணப்பங்களை பொதுமக்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைப்பார்கள். அவ் விண்ணப்பங்களை தமிழர்களது சிங்களவர்களது முஸ்லிம்களது என இன ரீதியாக பிரித்து ஆராயப்படமாட்டாது.

எனவே இனவாதத்தை இன மோதல்களை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிடலாகாது.

எனவே தனது கருத்தை விக்கினேஸ்வரன் வாபஸ் பெற வேண்டும். இல்லா விட்டால் அதனால் ஏற்படும் அனைத்து இனவாத மோதல்களுக்கும் அவரே பொறுப்பாளியாவார்.



பொலிஸ் திணைக்களம் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் கீழேயே உள்ளதா? கூட்டமைப்பு குற்றச்சாட்டு




பாதுகாப்பு அமைச்சின் செயலர் பொலிஸ் அதிகாரம் பற்றி பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கருத்து வெளியிட்டமையானது பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே உள்ளது என்பதையே எடுத்துக்காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வில் உரையாற்றிய முதலைமச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண மக்களைப் புரிந்துகொண்ட பொலிஸாரே இங்கு தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, வடக்கு மாகாணத்துக்கு தனியான பொலிஸ் துறை தேவையில்லை. ஏனைய மாகாணங்களுக்கு இல்லாத பொலிஸ்துறை வடக்கிற்கு மாத்திரம் எதற்கு என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சட்டம், ஒழுங்கு, பொலிஸ்துறையை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்குமே உண்டு. சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் வடக்கு மாகாண சபை உதவலாம். ஆனால் வடக்குக்கு தனியான பொலிஸ்துறை தேவையில்லை. ஏனெனில் வடக்கு மாகணம் தனியானதொரு நாடல்ல. இலங்கையின் ஒரு பகுதியே அது எனவும் கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சோடு இணைக்கப்பட்ட பின்னரும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் கருத்துக் கூறுவதைப் பார்க்கும் போது, பொலிஸ் திணைக்களம் மீண்டும் இரகசியமான முறையில் பாதுகாப்பு அமைச்சுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருவதற்கு இரண்டு தினங்கள் முன்பதாக, பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிரித்து சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அதற்குத் தனியான அமைச்சின் செயலாளரும் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னரும் பொலிஸ் அதிகாரத்தைப் பற்றி கோத்தபாய கருத்து வெளியிட்டிருப்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே சட்டம் மற்றும் ஒழுங்கு திணைக்களம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



திருமணமான 4வது நாளில் மனைவியை கொடூரமாக தாக்கிய புலனாய்வு பிரிவு உறுப்பினர் கைது- வெடிமருந்துடன் இரு சகோதரர்கள் கைது






திருமணம் முடித்து நான்காவது நாளில் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி காயம் ஏற்படுத்திய கணவரை களுத்துறை தெற்கு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 22ம் திகதி திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னர் நான்கு நாள் கழிந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து கணவர், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சந்தேக நபரான கணவர் அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மனைவி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

வெடி மருந்துடன் இரு சகோதரர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை தம்வசம் வைத்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களை பலாங்கொட பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 25 கிலோ கிராம் வெடி மருந்தும் ஆயிரத்து 200 கிலோ கிராம் ஆமோனியமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொட மொலபுரே ரஜவக்க பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

இவர்கள் கருங்கல் உடைக்கும் குவாரி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதற்கான அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்ட பிறகும் தம்மிடம் இருந்த வெடி மருந்துகளை மீள கையளிக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொள்கை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

குருணாகல் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் நடந்த பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் இப்பாகமுவ பாண்கொல்ல இராணுவ முகாமில் கடமையாற்றி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் பயன்டுத்தக் கூடிய துப்பாக்கி, நவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வாரியபொல பிரதேசத்தில் பழங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கட்டுபொத்த என்ற இடத்தில் பொலிஸார் நேற்று சோதனை சாவடியை அமைத்து வாகனங்களை பரிசோதித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அதனை பின் தொடர்ந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து நடத்திய விசாரணைகளின் பின்னர் ஏனையோர் கைது செய்யப்பட்டதாக கட்டுபொத்த பொலிஸார் கூறினர்.







பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானி​யா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்து​ம் தமிழர் பேரவையின் போராட்டம் தொடர்கிறது​





கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கு கொள்ளக்கூடாதென்பதை, பிரதமர் கமரூன் அரசிற்கு வலியுறுத்தும் முகமாக பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்தானியத் தமிழர் பேரவை கடந்த சில மாதங்களாகவே சந்தித்து வருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள்,  சந்திப்புகளின் தொடர்ச்சியாக மேலும் நான்கு பாராளுமன்ற உறுபினர்களை சந்தித்து, ஏன் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று விளக்கியதோடு மகஜர்களையும் கையளித்தனர்.

பிரித்தானிய அரசின் கூட்டணிக் கட்சியான Lib-Dem சார்ந்த வர்த்தகத்துறை அமைச்சர் வின்ஸ் கபேல் (Vince Cable), மேலும் அதே கட்சியைச் சேர்ந்த, Kingston Surbiton தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி (ED Davey) , ஆகியோருடனான சந்திப்பும், ஆளும் மிதவாத கட்சியைச் சேர்ந்த, Wolverhampton South West க்கான பாராளுமன்ற உறுப்பினர் போல் சிங் உப்பல்(Paul Singh Uppal) உடனான சந்திப்பின் போது, நீங்கள் என் முன் வைத்த விடயங்களை வெளிவிவகார அமைச்சிற்கும், அது சார்ந்த அமைச்சர்களது கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று உறுதியளித்தனர்.

தெற்கு Leicester க்கான, தொழிற் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், ஜோன் அஷ்வோர்த் (Jon Ashworth) உடனான சந்திப்பின் போது, இந்த விடயத்தை பற்றி ஏற்கனவே தான் நன்கு அறிந்திருப்பதாகவும், முற்று முழுதாக உங்கள் கோரிக்கையை ஆதரிக்கின்றேன் என்றும், இது பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதுவதாகவும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் உறுதியளித்தார்.

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய கலந்து கொள்வதினை எதிர்க்கும் முகமாக, எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி 4 மணியளவில், Embankment லிருந்து மாபெரும் கண்டன பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies