கொழும்பின் பொதுநலவாய மாநாட்டை கென்யா புறக்கணிக்கிறது!

22 Oct,2013
 




இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் தெ ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே உகண்டா, தான்சானியா, றுவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா ஆகிய நாடுகள் இலங்கை மாநாட்டில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன.

கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கென்யா தமது ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதும் அதனை தடுக்கமுடியவில்லை.




கைகளை உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை செய்யும் முறையை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானி!



விபத்துக்களின் போது கைகளை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்று அடிப்படையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கைகளை பொருத்தும் அதி நவீன முறை ஒன்றை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

வைத்திய கலாநிதி துசித ஜயமான என்ற மருத்துவ விஞ்ஞானியின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

எலிகளைக் கொண்டு கை உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பேர்ண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அநேகமாக கை உறுப்பு மாற்று சிகிச்சையின் போது ஏற்படும் பிரதான சிக்கலான நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நவீன முறைமையின் மூலம் மீளப் பொருத்தப்படும் கையின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையுடன் இயைபொத்து தொழிற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அமெரிக்க தடையை மீறி ஈரானிடம் இரகசியமாக எண்ணெய் கொள்வனவு செய்யும் இலங்கை?






ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், இலங்கை தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, இலங்கை அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது.

இலங்கையில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில், ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வசதிகளே உள்ளன. 

ஈரானிய மசகு எண்ணெய் சீராக கிடைக்காததால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை அடிக்கடி மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!




இலங்கையில்  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் படுகொலைகளைச் செய்தவர் யார் என்பது குறித்த தகவல்களையும் அந்த இணையம் அம்பலப்படுத்தியுள்ளது.

இதன்படி அரசுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்யும் குழுவின் பிரதான சூத்திரதாரியாக இலங்கை அமைச்சரவையின் சக்தி வாய்ந்த அமைச்சு ஒன்றின் செயலாளரே செயற்பட்டுள்ளார்.

இவரின் கீழ் மேலும் பல முக்கிய புள்ளிகள் செயற்பட்டு வந்துள்ளன.

இவ்வாறான கொலையாளிகளில் ஒருவராகச் செயற்பட்டவர்களில் சுனந்த லியன பத்திரன என்வரும் ஒருவராவார்.

இவர் கொழும்பு, மாநகர சபை உறுப்பினரான தேவிகா லியன பத்திரவின் கணவராவார்.

இவர் அரச சபை ஒன்றில் உயர் பதவி வகித்து வந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபா நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும் பின்னர் உயர்மட்ட அழுத்தம் காரணமாக இவர் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டார்.

அரசுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் கொழும்பு, நாராஹேன்பிட்டியிலுள்ள வீடொன்றிலிருந்தே தீட்டப்பட்டு வந்தது.

2005 ஆம் ஆண்டு தொடக்கமே இந்த வீடு படுகொலைத் திட்டமிடும் களமாக அமைந்து வருகிறது.

இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 25 பேரும் இந்தப் படுகொலையாளிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அரசுக்கு விரோதமானவர்களைக் கடத்தச் செல்லும் போது இவர்கள் இராணுவ உடையிலேயே செல்வர்.

இவர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் இலங்கை அரசே வழங்கி வருகிறது.

இவர்களுக்கான வாகன வசதிகளை அமைச்சர் ஒருவரின் செயலாளரே வழங்கி வருகிறார் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது



முல்லைத்தீவில் ‘‘வெள்ளைவான்” என்ற திரைப்படம் ஒளிப்பதிவு!- படையினர் அதிர்ச்சி - திவயின தகவல்





முல்லைத்தீவில் அண்மையில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலார் என்பவர்  ”வெள்ளை வான்”  என்ற தலைப்பில் குறுந்திரைப்படம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக ஒளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
முல்லைத்தீவு, தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலார் என்பவர் புலிகள் இயக்க ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கை அரசுக்கு எதிராக ”வெள்ளை வான்” என்ற தலைப்பில் குறுந்திரைப்படம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக ஒளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என திவயின தெரவித்துள்ளது.

இவரால் தயாரிக்கப்படவுள்ள ”வெள்ளை வான்” என்ற குறுந்திரைப்படம் தமிழர்களைக் கடத்திச் செல்வது தொடர்பிலானதாகும்.

அத்துடன், சாகித்திய விழாவுக்கென  இலங்கைக்கு வந்து முல்லைத்தீவு சென்றிருந்த லீனா மணிமேகலார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கும் சென்றிருந்தார். 

வரும் நவம்பர்மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மகாநாடு நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அரசைக் சங்கடப்படுத்தும் வகையிலேயே அவர் இந்தக் குறுந் திரைப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் திவயின தெரிவித்துள்ளது.



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: 10 வயது பொருத்தமானதா?- விசாரணை நடத்த தீர்மானம்




இலங்கையில் இடம்பெறும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை  10 வயது மாணவர்களுக்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையினை நடத்த உள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்படுகின்றார் எனின், இந்த முறைமை எந்தளவு சிறந்தது, வினாத்தாள் தயாரிக்கப்படும் முறை பிள்ளைகளுக்கு பொருத்தமானதா, புள்ளியிடும் முறை சரியானதா? என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.


இவ்விசாரணைகளின் போது சிறுவர் உளநல வைத்தியர்கள், கல்வி விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்கள் குழுவொன்றும் இதற்காக அழைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.



பெளத்தர் என்று சொல்இலிக்இகொள்ளும் தகுதி ஜனாஇதிஇபதி மஹிந்த ராஜஇபஇக்சவுக்கு இல்லை! சுவாமிநாதன் பா.உ.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தவறானதொரு அரசியல் பாதையினை தெரிவு செய்துள்ளது. பெளத்தர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக டி.எம்.சுவாமிநாதன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மதுபானங்களையும் போதைப்பொருட்களையும் எதிர்க்கும் பெளத்த அரசியல்வாதிகள் கசினோ சூதாட்டத்தினை மட்டும் ஆதரிப்பதற்கான காரணம் என்ன?

இலங்கை பெளத்த நாடாயின் இலங்கையின் இவ்வாறான சூதாட்டங்களையும் நாட்டை அழிக்கும் செயற்பாடுகளையும் ஆதரிக்கவே கூடாது.

பண ஆசையில் நாட்டையும் அப்பாவி மக்களையும் விற்று நாட்டின் கலாசாரப் பண்பாடுகளையும் அழிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பெளத்த மதகுருமாரிடமும் சிங்கள,  பெளத்த மக்களிடமும் அளித்த வாக்குறுதி இன்று பொய்யாகிவிட்டது.

மக்களிடம் கசினோவினை ஆதரிக்காது நடிக்கும் ஜனாதிபதி மறுபுறம் அரசாங்கத்தில் இருக்கும் சூதாட்டக்காரர்களை ஏவிவிட்டு கசினோ சட்டமூலத்தை நிறைவேற்ற நினைக்கின்றார்.

இலங்கையில் வாழும் அப்பாவி மக்களின் அன்றாடத் தேவைகள் அனைத்திற்கும் வரிகளை அறவிடும் அரசாங்கம் ஜேம்ஸ் பெக்கர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் சூதாட்டம் நடத்துவதற்கு இலவச விடுதிகளையும் வரிச் சலுகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

நூறு ரூபாய் இருநூறு ரூபாய் பொருட்களுக்கு இரு மடங்கு வரி அறவிடுவோர் கோடிக்கணக்கில் சூதாட்டம் செய்வோருக்கு இலவச வரிச்சலுகைகளைக் கொடுக்கின்றனர்.

மேலும் கசினோவினை கொண்டு வருமுன் இலங்கையின் சட்டமும் நீதியும் ஒழுங்காகச் செயற்படுகின்றதா என் பதையும் கவனிக்க வேண்டும்.

இலங்கையில் எத்தனை கசினோ நிலையங்களை கொண்டு வந்தாலும் சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவைப் போன்று எமது நாட்டை மாற்ற முடியாது.

அந்த நாடுகளில் சட்டமும் நீதியும் சரியாகப் பிரயோகிக்கப்படுகின்றன. அதேபோல், அவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. கலாசார முறைமைகளும் வேறுபட்டன. அவர்களுடன் எமது மக்களை ஒப்பிட்டு செயற்பட முடியாது.

இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத அரசாங்கமே இலங்கையில் ஆட்சி நடத்துகின்றது. அதேபோல், இக் கசினோ சூதாட்டத்தினை இலங்கையில் நடை முறைப்படுத்திய சில காலத்திலேயே மக்களின் எதிர்ப்பு தெரியவரும் என்றார்.



ஓய்வுபெற்ற அதிபரை மயக்கி விட்டு வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளை! வெள்ளவத்தையில் துணிகரம்



கொழும்பு வெள்ளவத்தை பெரேரா ஒழுங்­கை­யி­லுள்ள தொடர்மாடி­யி­லுள்ள வீடொன்­றுக்குள் புகுந்த இருவர் அந்த வீட்டின் உரி­மை­யா­ள­ரான ஓய்­வு­பெற்ற அதி­பரை மயக்­க­ம­டை­யச்­ செய்து வீட்­டி­லி­ருந்த பொருட்­களை கொள்­ளை­யிட்டுச் சென்ற துணிகரச் சம்­பவம் நேற்று திங்கட்கிழமை முற்­பகல் இடம்­பெற்­றுள்­ளது.
இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது

ஓய்­வு­பெற்ற அதிபர் தனது மனை­வி­யு­டனும் மக­ளு­டனும் இந்த வீட்டில் வசித்து வரு­கின்றார். இவ­ரது மகன் லண்­ட­னி­லி­ருந்து கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் இலங்கை வந்­தி­ருந்தார்.

லண்­ட­னி­லி­ருந்து கொழும்பு வந்த மகன் தனது தாயா­ருடன் யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்­றுள்ளார். மகளும் வேலைக்குச் சென்ற நிலையில் ஓய்­வு­பெற்ற அதிபர் நேற்று தனி­யாக வீட்டில் இருந்­துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் தொடர்மாடி வீட்­டுக்குக் கீழ் வந்த இருவர் ஓய்­வுபெற்ற அதி­பரின் பெயரைச் சொல்லி அவ­ரது வீட்­டுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்­மா­டியின் பாது­கா­வ­லரிடம் கேட்­டுள்­ளனர்.

ஓய்வு பெற்ற அதி­பர்கள் இருவர் தொடர்மாடியில் இருக்­கின்­றனர் என்று பாது­கா­வலர் கூறி­ய­ போது லண்­ட­னி­லி­ருந்து அதி­பரின் மகனும் வந்­துள்ளார். அந்த வீட்­டிற்கே செல்ல வேண்­டு­மென இரு­வரும் கூறியுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து தொடர்­மா­டியின் பாது­கா­வலர் ஓய்­வு­பெற்ற அதி­பரின் வீட்­டுக்கு உள்­ளக தொலை­பே­சியில் அழைப்பு எடுத்­த­துடன் அவ­ரது வீட்­டுக்கு இருவர் வந்­துள்ள தக­வலை தெரி­வித்­துள்ளார்.

இந்த நிலையில் தனது மக­னது நண்­பர்கள் யாரோ வந்­துள்­ளார்கள் என்று எண்­ணிய ஓய்­வு­பெற்ற அதி­பரும் வந்த இரு­வ­ரையும் வீட்­டுக்குள் அனு­ம­திக்­கு­மாறு பாது­கா­வ­ல­ரிடம் கூறி­யுள்ளார்.

பாது­கா­வ­லரும் வந்த இரு­வ­ரையும் தொடர்­மா­டியின் மேலே செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார்.

ஓய்­வு­பெற்ற அதி­பரின் வீட்­டுக்கு வந்த இரு­வரும் முதலில் நட்­பு­ற­வாக பேசி­யுள்­ளனர். தனது மகனின் நண்­பர்கள் என்­பதால் அதி­பரும் ஆரம்­பத்தில் நட்­பு­ற­வுடன் .பேசி­யுள்ளார்.

சிறி­து­நேரம் செல்ல தாங்கள் இர­க­சிய பொலிஸார் எனவும் மகன் குறித்து விசா­ரிக்­கவே வந்­துள்­ள­தா­கவும் இரு­வரும் கூறி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கதி­ரை­யி­லி­ருந்து எழுந்த ஒருவர் யன்னல் பக்­க­மாக செல்­வ­து போல் சென்­றுள்ளார். அப்­போது அவர் கைக்­குட்­டை­யொன்றை ஓய்­வு­பெற்ற அதி­பரின் முகத்­துக்கு அருகில் கொண்­டு வந்துள்ளார். இதன் பின்னர் அதிபர் மயக்­க­ம­டைந்­துள்ளார்.

முற்­பகல் 11.30 மணி­ய­ளவில் இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நண்­பகல் 12.20 மணி­ய­ளவில் கண் வி­ழித்த ஓய்­வு­பெற்ற அதிபர் பார்த்­த­ போது வீட்டின் விறாந்­தையில் இருந்த மடிக்­க­ணனி மற்றும் தனது பேர்ஸ் என்­பவை காணா­மல் ­போ­யுள்­ளதை கண்­டுள்ளார்.

வீட்­டுக்குள் வந்த இரு­வரும் கொச்சைத் தமி­ழி­லேயே பேசி­யுள்­ளனர். இவர்கள் ஓய்­வு­பெற்ற அதி­ப­ருக்கு மயக்­கத்தை ஏற்­ப­டுத்­திய பின்னர் மடிக்­க­ண­னியையும் அவ­ரது பேர்­சையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

வரும்­போது இவர்கள் இரு­வரும் கைப்பை ஒன்­றினைக் கொண்டே வந்துள்ளனர். அதற்குள் மடிக்கணனியையும் பேர்சையும் வைத்துக் கொண்டு இவர்கள் சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

பட்டப்பகலில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்து வீடொன்றில் இருவர் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரே இரவில் பத்து வீடுகளில் திருடர்கள் கைவரிசை: வடமராட்சியில் சம்பவம் - வாகன விபத்தில் மாணவி காயம்






வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்றிரவு 10 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் நேற்று இரவு 10 வீடுகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் உட்புகுந்த திருடர்கள் 8 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் மற்றும் நகைகள் பணம் என்பனவற்றைத் திருடியுள்ளனர் . சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வீடுகளில் இருந்த இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள் அருகிலுள்ள பற்றைகளுக்குள் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இச் சம்பவங்கள் குறித்து பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வாகன விபத்தில் மாணவி காயம்

ஏறாவூர் நகர மத்தியில் கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்றுள்ள விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயிலும் பதுர் பாத்திமா (வயது 12) என்ற மாணவியே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது அவர் மீது எல்ப் ரக வாகனம் ஒன்று வந்து மோதியுள்ளதால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



முள்ளிவாய்க்கால் அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல பிரசார பயணம்!- சீமான்



இலங்கை முள்­ளி­வாய்க்கால் அவ­லத்தை உலகின் கவ­னத்­திற்கு கொண்டு செல்லும் வகையில் 8, 9ம் திக­தி­களில் பிர­சார பயணம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக நாம் தமிழர் கட்­சியின் தலைமை ஒருங்கிணைப்­பாளர் சீமான் தெரி­வித்தார்.
மயி­லா­டு­து­றையில் நிரு­பர்­க­ளுக்கு பேட்­டிய­ளிக்­கை­யி­லேயே அவர் இவ் அறி­வித்­தலை வெளி­யிட்டார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

இலங்­கை போரின் இறுதி கட்­டத்தில் முள்­ளி­வாய்க்­காலில் நடை­பெற்ற அவ­லத்தை உலகின் கவ­னத்­திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் 8, 9ம் திக­தி­களில் பிர­சார பயணம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

இதில் தமிழ் தேசிய இயக்க அமைப்­பாளர் பழ.நெடு­மாறன் நட­ராசன் உள்­ளிட்­ட­வர்கள் கலந்து கொள்­கி­றார்கள்.

மேலும் பொது­ந­ல­வாய மாநாட்டை இலங்­கையில் நடத்தக் கூடாது.

கச்­ச­தீவில் சீனா முகா­மிட்­டுள்­ளது.

இதனால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.


முறிகண்டி – வேரவில்- பாலாவி வரையிலான வீதி மோசமான நிலையில்...! திருத்தம் செய்யுமாறு சிறீதரன் எம்.பி. வேண்டுகோள்
ஜ செவ்வாய்க்கிழமை 22 ஒக்ரோபர் 2013 07:53.29 யுஆ புஆவு ஸ

முறிகண்டி – வேரவில்- பாலாவி வரையிலான வீதி யுத்தம் முடிந்து மக்கள் மீள்குடியேறி நான்கு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் இன்னும் ஆரம்பத் திருத்தம் கூடச் செய்யப்படாது மோசமான நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த வீதியானது கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களான முழங்காவில்இ கரியாலை நாகபடுவான் நாச்சிக்குடாகுமுழமுனை வேரவில் கிராஞ்சி வலைப்பாடுபொன்னாவெளி பல்லவராயன் கட்டு கிராமங்களுக்குச் செல்வதற்கான பிரதான போக்குவரத்து வீதியாகும்.

முறிகண்டியிலிருந்து அக்கராயன் வைத்தியசாலைச் சந்தி வரை செய்யப்பட்டுள்ள வீதித் திருத்தம் அப்படியே நிற்கிறது. மிகுதிப் பாதை மக்கள் பயணம் செய்யமுடியாத வகையிலேயே உள்ளது.

இதிலும் குறிப்பாகப் பல்லவராயன் கட்டு சந்தியிலிருந்து கிராஞ்சிவேரவில் ஊடாகப் பாலாவிவரை செல்லும் பாதை மேலும் மோசமடைந்துள்ளது.

இனிப் பருவகால மழையும் ஆரம்பித்துள்ளதால் வீதியின் இரண்டு பக்கங்களும் வெள்ளம் நிரம்பிவிடும். தற்பொழுது கூட வாகனங்கள் வீதியால் செல்லாது தரவைகளால் தான் செல்லுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வீதி பற்றி சிந்திக்காமல் இருப்பதையிட்டு அப்பகுதி மக்கள் மிகவும் துக்கமடைந்துள்ளனர்.

இவ்வீதி தற்காலிகமாகவேனும் உடன் திருத்தம் செய்யப்படாவிட்டால் அப்பகுதி மக்கள் இந்த மழைக்காலத்தில் தனித் தீவில் வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு 2013.04.03ம் திகதி கடிதமூலம் தெரியப்படுத்தியிருந்த நிலையில் மேற்குறித்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை உணர்த்தி இரண்டாவது கடிதத்தினை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா பூநகரிப் பிரதேச சபைத் தவிசாளர் பூநகரிப் பிரதேச செயலாளர் பணிப்பாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம் – கிளிநொச்சிமுழங்காவில் கரியாலை நாகபடுவான் நாச்சிக்குடாகுமுழமுனை வேரவில் கிராஞ்சி வலைப்பாடுபொன்னாவெளி பல்லவராயன்கட்டு கிராம அபிவிருத்தி மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் செயலாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.








Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies