உலகம் முழுவதும் கொரோனா 13.30 கோடியாக உயர்வு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,794 பேர் உயிரிழப்பு
07 Apr,2021
கொரோனா பாதிப்பு - பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,794 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 2-ம் இடம் வகிக்கும் பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3,794 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,36,947 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,391 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,00,580 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.23 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,30,02,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,72,48,070 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 லட்சத்து 85 ஆயிரத்து 153 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 22,868,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99,36 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.