இந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 லட்சத்தை தாண்டியது

31 May,2020
 

 


 இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்தது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 31) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,763 ல் இருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,971 ல் இருந்து 5,164 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ல் இருந்து 86,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 89,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 65,168 - 2,197
தமிழகம் - 21,184 - 160
டில்லி - 18,549 - 416
குஜராத் - 16,343 - 1,007
ராஜஸ்தான் - 8,617 - 193
மத்திய பிரதேசம் - 7,891 - 343
உத்தர பிரதேசம் - 7,445 - 201
மேற்கு வங்கம்- 5,130 - 309
ஆந்திரா - 3,569 - 60
கர்நாடகா- 2,922 - 48
தெலுங்கானா - 2,499 - 77
கேரளா - 1,208 - 9
புதுச்சேரி- 51 - 0
தமிழகத்தில் இன்று (மே 30) புதிய உச்சமாக ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆகவும், 160 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 82 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 21,184 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,605 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று உயிரிழந்த 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
 
 
இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,239 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,030 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1915 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies