வெனிஸின் 80% க்கும் அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கின
15 Nov,2019
பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் வெனிஸ் நகரத்தின் 80% க்கும் அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த செவ்வாயன்று அங்கு 187 சென்ரி மீற்றர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து கலாசார நினைவுச்சின்னங்கள், வணிக நிலையங்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
மிதக்கும் நகரம் என்று அறியப்பட்ட வெனிஸில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற செயின்ற் மார்க்ஸ் சதுக்கம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளன.
வெனிஸ் நகரத்தில் புகழ்பெற்ற படகுச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
பெரு வெள்ளத்தினை அடுத்து அங்கு அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளதுடன் 20 மில்லியன் யூரோ நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 5,000 யூரோவும் வணிக நிலையங்களுக்கு 20,000 யூரோவும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது