மத்திய தரைக்கடலில் படகு மூழ்கியது: 170 அகதிகள் உயிரிழப்பு?
20 Jan,2019
மத்திய தரைக்கடல் பகுதியில் இரு படகுகள் வெவ்வேறு இடங்களில் கவிழ்ந்ததில், 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.சுமார் 117 பேர்கள் பயணித்த படகானது, லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கூறுகிறது.
53 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு படகு, மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.