பாக்.,கில்   சீன தூதரகம் மீது திடீர் தாக்குதல்;

23 Nov,2018
 

 

 
கராச்சி : பாகிஸ்தானில், சீன துாதரகத்தில் நடக்கவிருந்த, பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலை, போலீசார் முறியடித்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், இரண்டு போலீசார் உட்பட, ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
அண்டை நாடான, பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன துாதரகம் உள்ளது. இங்கு எப்போதும், அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.இந்நிலையில் நேற்று, சீன துாதரகத்திற்குள், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர், ஊடுருவ முயன்றனர். இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், இரண்டு போலீசார் உட்பட நான்கு பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதன்பின், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதன்பின், சீன துாதரகத்தைச் சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டன.அங்கு பதற்றம் நிலவுவதால், ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சீன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள சீன துாதரகங்கள், அலுவலகங்கள் மற்றும் சீன மக்களுக்கு, அந்நாட்டு அரசு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு, பலுாச் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
குண்டு வெடிப்பு: 30 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன் கவா மாகாணத்தில், கலாயா என்ற பகுதியில், பிரபலமான மார்க்கெட் உள்ளது. இங்கு, நேற்று திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில், 30 பேர் உயிரிழந்தனர். இவர்களில் மூன்று பேர், சீக்கியர்கள். மேலும், 40 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies