ஆப்கன் ஆலோசனை கூட்டத்தில் தாக்குதல் கவர்னர் உட்பட 18 பேர் பலி
12 Apr,2018
:ஆப்கனில் போலீஸ் ஸ்டேஷனில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலில் மாவட்ட கவர்னர் உட்பட 18 பேர் பலியாகினர்.
ஆப்கனின் மத்திய பகுதியான காஸ்னி மாகாணம், கவுஜா உமரி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷனில் நேற்று காலை மாகாண கவர்னர், புலனாய்வுத்துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மாகாண கவர்னர், புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி, காவல்துறை துணைத்தலைவர் உட்பட 18 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.தாக்குதல் சம்பவத்தை அந்த கவுஜா மாவட்ட சபை உறுப்பினரான மொஹம்மத் ஆரிப் ரஹ்மானி உறுதி செய்துள்ளார். ஆனால் மரணமடைந்தவர்கள் யார், எத்தனை பேர் என்ற விபரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.