எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இடைக்கால இழப்பீட்டை ஏற்க இலங்கை தீர்மானம்
29 Aug,2023
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பேரழிவுக்கான இடைக்கால இழப்பீட்டை ஏற்க இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
எக்ஸ் பிரஸ் பேர்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சட்ட நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டதாக்க சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.
காப்பீட்டு நிறுவனமும் சட்ட நிறுவனமும் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த கலந்துரையாடலின் போது இடைக்கால இழப்பீடு வழங்க விருப்பம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.